தமிழக பாஜக மாநில தலைவராக இருந்த தமிழிசை தெலங்கானா மாநில ஆளுநராக  நியமிக்கப்பட்டதை அடுத்து  அந்தப் பதவி காலியாக இருந்து வருகிறது. இதையடுத்து கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் தலைவர்  இல்லாமலேயே பாஜக செயல்பட்டு வருகிற்து.

பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம் என பல பெயர்கள் தமிழக  பாஜக தலைவர் பெயருக்கு  அடிபடுகிறது.

இந்நிலையில் டிசம்பர் முதல் வாரத்தில் பாஜக மாநில தலைவர் தேர்தல் இருக்கும் என்று பாஜக மூத்த தலைவர்  இல. கணேசன் தகவல் தெரித்துள்ளார். 

இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், 'டிசம்பர் முதல் வாரத்தில் பாஜக மாநில தலைவர் தேர்தல் இருக்கும். உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடர்கிறது. உள்ளாட்சித் தேர்தலில் பாஜக சார்பில் டிசம்பர் 16 ஆம் தேதி  முதல் விருப்ப மனு விநியோகம் துவங்கும்' என்றும் இல.கணேசன் தெரிவித்தார்.