தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை தெலங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டதையடுத்து புதிய தலைவரை நியமிக்கும் பணியில் பாஜக தலைமை தீவிரமாக ஈடுபட்டிருந்தது.

இதனையடுத்து தமிழக பாஜக தலைவர் பதவி மற்றும் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் தமிழிசை சவுந்தரராஜன் ராஜினாமா செய்தார். பின்பு தெலுங்கானா மாநில கவர்னராக செப்டம்பர் 08ஆம் தேதி பதவி ஏற்றுக்கொண்டார். 

அதன் பின்பு தமிழக பாஜக தலைவர் பதவிக்கு யார் வருவார் என்று எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.  பாஜகவின் அடுத்த தலைவர் பதவியில் தமிகத்தில் இருக்கும் சீனியர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுவதாக சொல்லப்படுகிறது. 

அந்த போட்டியில் கொங்கு மண்டலத்தில் சி.பி.ராதாகிருஷ்ணனும், வானதி சீனிவாசனும் உள்ளனர். இவர்களில் யாராவது ஒருவரை தமிழக பாஜக தலைவராக நியமிக்க அமித்ஷா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

தமிழக பாஜக தலைவராக  அடுத்து யார் வருவார் என்று குறித்து உயர்மட்டக்குழுவில் விவாதம் நடந்துள்ளது. அந்தக் கூட்டத்தில் தான் இநத் முடிவெடுக்கப்பட்டதாக தெரிகிறது . இந்நிலையில்  இடைத்தேர்தல் குறித்து பாஜக நிலைப்பாட்டை இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.