தமிழகத்தில் நீட் தேர்வு மூலம் மருத்துவ கலந்தாய்வு நடத்தி வருவதன் மூலம் ஏழை எளிய மக்களின் குழந்தைகளும் டாக்டருக்கு படிக்க முடியும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று ய்தியாளர்களை சந்தித்த தமிழிசை செளந்தரராஜன் நீட் மூலம் தமிழக மாணவர்கள் பலர் பயன் பெற்றுள்ளதாகவும், மருத்துவம் என்பது பணக்கார குழந்தைகள் மட்டுமே படிக்கும் நிலைமாறி நீட் மூலம் தற்போது ஏழை குழந்தைகளும் படிக்கும் நிலைக்கு வந்துள்ளனர்  என்றும் தெரிவித்தார்.

தமிழக அரசியல் கட்சிகள் அனைத்து பிரச்சனைகளுக்கும் போராட்டம் என்ற ஒன்றை கைவிட வேண்டும் என்றும் நீட் பற்றி தமிழக அரசியல் தலைவர்கள் குறை கூறும் அளவு எதுவும் நடக்கவிலை எனவும் தெரிவித்தார்.

மேலும் நீட் தேர்வு குறித்து குறை கூறும் அரசியல் தலைவர்கள் முதலில் தமிழகத்தின் கல்வி தரம் பற்றி சிந்தித்து பார்க்க வேண்டும் எனவும்  முதலில் தமிழக கல்வி தரத்தை மாற்றுங்கள் பிறகு போராட்டம் செய்யலாம் எனவும் குறிப்பிட்டார். 

இதை தொடர்ந்து நீட் கலந்தாய்வு மூலம் தமிழக மாணவர்களுக்கு மருத்துவ வாய்ப்பு மீண்டும் கிடைத்துள்ளதாகவும் நீட் தேர்வுக்கு எதிராக எத்தனை அரசியல் கட்சிகள் போராடினாலும் மாணவர்கள் தங்கள் பக்கம் உள்ளதாகவும்  தமிழிசை தெரிவித்தார்.