தமிழக பாஜக தலைவர் எல்.முருகனின் இளைய மகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். 

தமிழக பாஜக தலைவர் எல்.முருகனின் இளைய மகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். 

தமிழகத்தில் கொரோனா முதல் அலையை விட 2வது அலை சுனாமி வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மே 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அப்படி இருந்த போதிலும் பாதிப்பு எண்ணிக்கை குறையவில்லை. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 33,000ஐ தாண்டியுள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 

கொரோனா சாமானிய மக்களைக் கடந்து அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்களுக்கு தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அண்மையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்டோருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது. இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் எல்.முருகனின் இளைய மகனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

இதுதொடர்பாக எல்.முருகன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்; எனது இளைய மகன் இந்திரஜித்துக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 4 நாட்களாக மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

Scroll to load tweet…

எனக்கும், எனது மூத்த மகன் மற்றும் மனைவிக்கும் பரிசோதனை முடிவில் பாதிப்பு இல்லை என்பது உறுதியாகியுள்ளது. எனினும், நான் என்னை தனிமைப்படுத்திக்கொண்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.