Asianet News TamilAsianet News Tamil

காலில் விழுந்த வாலிபரை தூக்கி விட்டு.. அடுத்த நிமிடமே அண்ணாமலை என்ன செய்தார் தெரியுமா? வைரல் போட்டோ..!

பால் விலை, மின்சார கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக சார்பாக ஆர்பாட்டம் நடைபெற்றது.  ஈரோடு மாவட்டம் அந்தியூரில் நடைபெற்ற போராட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.

Tamilnadu BJP head Annamalai touch  youth foot in Erode... Viral photo
Author
First Published Nov 17, 2022, 7:42 AM IST

காலில் விழுந்த மழைவாழ் பகுதியை சேர்ந்த வாலிபரின் காலை பதிலுக்கு தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தொட்டு வணங்கினார். இதனையடுத்து, மழைவாழ் மக்கள் வீட்டில் அண்ணாமலை களி உணவு விரும்பி சாப்பிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. 

பால் விலை, மின்சார கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக சார்பாக ஆர்பாட்டம் நடைபெற்றது.  ஈரோடு மாவட்டம் அந்தியூரில் நடைபெற்ற போராட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி அண்ணாமலை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி குறித்து கடுமையாக விமர்சனங்களை முன்வைத்தார்.

இதையும் படிங்க;- இரட்டை வேடம் போட்டு நம்பி வந்த மக்களுக்கு துரோகம் இழைக்கும் திமுக..! போராட்டத்திற்கு தேதி குறித்த அண்ணாமலை..!

Tamilnadu BJP head Annamalai touch  youth foot in Erode... Viral photo

இதனையடுத்து, ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான அந்நியூரை அடுத்த  தாமரைக்கரை பகுதிக்கு சென்றார். அப்போது மலைவாழ் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் மற்ற மாவட்டத்தில் கொடுப்பது போல சாதி சான்றிதழ் கொடுப்பது இல்லை. இதனால், கல்வி, வேலைவாய்ப்பில் பாதிக்கப்பட்டுவதாக கண்ணீர் மல்க கூறி அண்ணாமலையிடம் கோரிக்கை மனு அளித்தார். அதனை அண்ணாமலை பெற்றுக்கொண்டு உங்கள் கோரிக்கை நிச்சயம் நிறைவேற்றப்படும் என்றார். 

இதையும் படிங்க;- முதல்வர் குறித்து அவதூறு பேச்சு.. பாஜக நிர்வாகியை வீடு புகுந்து அலேக்கா தூக்கிய போலீஸ்..!

Tamilnadu BJP head Annamalai touch  youth foot in Erode... Viral photo

அப்போது, எதிர்பாராத விதமாக அந்த வாலிபர் அண்ணாமலையின் காலில் விழுந்தார். இதனை சற்றும் எதிர்பாராத அண்ணாமலை அவரை உடனே தூக்கிவிட்டு,  பதிலுக்கு அந்த வாலிபரின் காலை அண்ணாமலை தொட்டு வணங்கினார். இது தொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது. இதனையடுத்து, சோளகர் சமூகத்தை சேர்ந்த மலைவாழ் மக்களான பூமிகா-வெள்ளையன் என்பவரது வீட்டில் மதிய உணவாக களி உணவு விரும்பி சாப்பிட்டுவிட்டு அண்ணாமலை அங்கிருந்து கிளப்பினார். 

இதையும் படிங்க;- 16 மாதம் தான் உள்ளது.! தமிழகத்தில் மாற்றம் உறுதி..! 25 எம்பிக்கள் டெல்லி செல்வார்கள்.! அடித்து கூறும் அண்ணாமலை

Follow Us:
Download App:
  • android
  • ios