tamilnadu bjp carders celebrate karnataka election victory
கர்நாடக தேர்தலில் கருத்து கணிப்புகள் கூறியதை போல் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆரம்பத்திலிருந்து பாஜக வெற்றி பெறும் என்ற ஒரு தோற்றம் உருவானதால் பட்டாசு வெடித்தும் ஸ்வீட் கொடுத்தும், புசுவானம் விட்டும் கொண்டாடி மகிழ்ந்த பிஜெபியினருக்கு அல்லு தெறிக்கவிட்டுள்ளது. இலக்ஷனின் எண்டிங் ரிசல்ட்.

வாக்குகள் எண்ணத்துவங்கியதும், ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. நிமிடத்துக்கு நிமிடம் முன்னிலை நிலவரம் மாறிக்கொண்டே இருந்தது. பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை என்ற நிலையில், மதியம் இரண்டு மணிக்கு கிடைத்த தகவலின் படி, 222 தொகுதிகளில் 111 இடங்களில் பாரதீய ஜனதா கட்சியும், 61 இடங்களில் காங்கிரஸ் கட்சியும், ஜேடிஎஸ் கட்சி 48 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. பிற கட்சிகள் 2 இடங்களில் முன்னிலை பெற்றிருந்ததால்.
கர்நாடக தேர்தல் முடிவுகளின் படி பாஜக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ளதால், பாரதீய ஜனதா கட்சியினர், அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் பட்டாசுகள் வெடித்து கொண்டாடி வருகின்றனர். கர்நாடகாவில் தான் கொண்டாடுகிறார்கள் என நினைத்தால் தமிழகம் முழுவதும், பாஜகவினர் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கோலாகலமாக கொண்டாடித்தீர்த்து வந்தனர்.

திடீரென டுவிஸ்ட் ஏற்பட்டது. இந்த தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸ் 67 தொகுதிகளிலும், மஜத 40 தொகுதிகளிலும் முன்னிலை பெற்று வருகின்றன. பெரும்பான்மைக்கு இன்னும் சில இடங்களே தேவை என்ற நிலையில், பாஜக முன்னிலை வகித்து வந்தபோதும், பாஜக பெரும்பான்மை பெறவில்லை என்பதால், மதசார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் தேவ கௌடாவுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி போனில் ஆலோசனை நடத்தினார்.

அப்போது காங்கிரஸை ஆதரித்தால் குமாரசாமிதான் முதல்வர் என்று வாக்குறுதி அளித்தார். இதை தேவ கௌடா ஏற்றுக் கொண்டார். இதையடுத்து காங்கிரஸ் கட்சியும், ஜேடிஎஸ் கட்சியும் இணைந்து ஆளுநரை இன்று சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ளன. கோவா போல கர்நாடகாவிலும் ஏற்படாமல் இருக்க அவசர அவசரமாக வண்டி ஏறி பெங்களுருவிர்க்கு வந்தார்.

தற்போது பேச்சு வார்த்தையும் முடிந்து ஜேடிஎஸ் ஆட்சி அமைக்கும் நிலையில், கர்நாடகாவில் என்ன நடக்கிறதென்றே தெரியாமல் இருக்கும் நம்ம ஊரு சேலத்து பிஜேபிகாரர்கள் புசுவானம் விட்டும் ஸ்வீட் எடுத்தும் கொண்டாடி மகிழ்கின்றனர்.
