Asianet News TamilAsianet News Tamil

அமைச்சர் வேலுமணியை ஒருமையில் பேசிய திமுக எம்.எல்.ஏ... ஸ்டாலினை மன்னிப்பு கேட்க சொல்லும் ஓபிஎஸ்..!

தமிழக சட்டப்பேரவையில் 2-வது நாளான இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. விவாதத்தின்போது திமுக, அதிமுக இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் பேசும்போது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி, சட்டம் ஒழுங்கில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளதாகவும், இதை மத்திய அரசு சொல்வதாகவும் குறிப்பிட்டார். சட்டம் ஒழுங்கு சரியில்லை என திமுக எம்எல்ஏ ஆதாரத்துடன் சொல்ல முடியுமா? என்றும் கேள்வி எழுப்பினார்.

tamilnadu assembly DMK MLA J Anabhakaan speech...OPS to apologize to Stalin
Author
Tamil Nadu, First Published Jan 7, 2020, 2:57 PM IST

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற விவாதத்தின்போது, உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணியை உட்கார் என ஒருமையில் பேசிய திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் 3 நாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 

தமிழக சட்டப்பேரவையில் 2-வது நாளான இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. விவாதத்தின்போது திமுக, அதிமுக இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் பேசும்போது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி, சட்டம் ஒழுங்கில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளதாகவும், இதை மத்திய அரசு சொல்வதாகவும் குறிப்பிட்டார். சட்டம் ஒழுங்கு சரியில்லை என திமுக எம்எல்ஏ ஆதாரத்துடன் சொல்ல முடியுமா? என்றும் கேள்வி எழுப்பினார்.

tamilnadu assembly DMK MLA J Anabhakaan speech...OPS to apologize to Stalin

அதன்பின்னர் உள்ளாட்சி அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கும், எம்எல்ஏ ஜெ.அன்பழகனுக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. அமைச்சரைப் பார்த்து ஜெ.அன்பழகன், ஒருமையில் பேசியதால், அவரை அவையில் இருந்து வெளியேற்ற வேண்டும் என அதிமுக வலியுறுத்தியது. ஜெ.அன்பழகனை வெளியேற்றுவது தொடர்பான தீர்மானத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கொண்டு வந்தார். அமைச்சரை ஒருமையில் பேசியது தவறு என சபாநாயகர் தனபால் சுட்டிக்காட்டினார்.

tamilnadu assembly DMK MLA J Anabhakaan speech...OPS to apologize to Stalin

இதனையடுத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, அமைச்சரைப் பார்த்து எங்கள் உறுப்பினர் அன்பகழன் பேசியது தவறுதான், ஆனால், அதே வார்த்தையை அமைச்சரும் பேசியிருக்கிறார். இதற்கு சபாநாயகர் என்ன பதில் அளிப்பார்? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம் ஜெ.அன்பழகன் செயலுக்கு எதிர்க்கட்சி தலைவர் வருத்தம் தெரிவித்ததால் மறப்போம், மன்னிப்போம் என்றார். 

tamilnadu assembly DMK MLA J Anabhakaan speech...OPS to apologize to Stalin

இதனையடுத்து, மீண்டும் தீர்மானம் எடுத்துக்கொள்ளப்பட்டு உள்ளாட்சித்துறை அமைச்சரை ஒருமையில் பேசியதால் நடுப்பு கூட்டத்தொடரில் பங்கேற்ற ஜெ.அன்பழகனுக்கு 3 நாள் தடை விதிக்கப்படுவதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios