Asianet News TamilAsianet News Tamil

கிளீன் போல்டு... நோ-பால்... சிக்சர்... சட்டப்பேரவையில் திமுகவை திணறடித்த அதிமுக அமைச்சர்கள்..!

திமுக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வீசும் பந்து நோ-பால் ஆகிவிடும் என்று மீள்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

tamilnadu assembly...dmk and admk fight
Author
Chennai, First Published Feb 12, 2019, 3:10 PM IST

திமுக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வீசும் பந்து நோ-பால் ஆகிவிடும் என்று மீள்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். 

தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழக பட்ஜெட் தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தொடரில் அ.தி.மு.க - தி.மு.க இடையே வார்த்தைப் போர் நடந்து வருகிறது. இரு கட்சி உறுப்பினர்களும் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருக்கின்றனர். முன்னதாக நேற்று பேசிய அ.தி.மு.க எம்.எல்.ஏ செம்மலை, பொங்கலுக்கு 1,000 ரூபாய் அளித்து முதல்வர் முதல் சிக்சர் அடித்தார். தொடர்ந்து பல்வேறு திட்டங்கள் மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிக்சர் அடித்துக்கொண்டிருக்கிறார் என்று பேசினார். tamilnadu assembly...dmk and admk fight

இதைக் குறிப்பிட்டுப் பேசிய திமுக எம்எல்ஏ பொன்முடி, ஸ்டாலின் வீசும் பந்தில் அதிமுக ஆட்சி கிளீன் போல்டு ஆகும் என்றார். இதற்கு பதிலளித்த பேசிய அமைச்சர் ஜெயக்குமார் ஸ்டாலின் வீசும் பந்து நோ-பால் ஆகும் என்று தெரிவித்தார். tamilnadu assembly...dmk and admk fight

இதனையடுத்து பேசிய அமைச்சர் தங்கமணி மைதானத்திற்குள் வந்து வீசப்படும் பந்துதான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் மைதானத்திற்குள் உள்ளேயே வராமல் ஸ்டாலின் பந்தை வீசிக்கொண்டிக்கிறார் என பதிலளித்தார். இதனால் சட்டப்ரேவையில் காரசார விவாதம் நடைபெற்றது.

Follow Us:
Download App:
  • android
  • ios