Asianet News TamilAsianet News Tamil

பதவி விலக தயார்... சட்டப்பேரவையில் சி.வி.சண்முகம் அதிரடி...!

நீட் தேர்வு விவகாரத்தில் கடந்த 19 மாதங்களாக மக்களை ஏமாற்றிய சட்ட அமைச்சர் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் ஆவேசமாக கூறியுள்ளார். 

tamilnadu assembly... CV Shanmugam in Action
Author
Tamil Nadu, First Published Jul 10, 2019, 12:33 PM IST

நீட் தேர்வு விவகாரத்தில் கடந்த 19 மாதங்களாக மக்களை ஏமாற்றிய சட்ட அமைச்சர் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் ஆவேசமாக கூறியுள்ளார். tamilnadu assembly... CV Shanmugam in Action

நீட் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்ட விவகாரம் தமிழக சட்டப்பேரவையில் திமுக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. அப்போது, மு.க.ஸ்டாலின் பேசுகையில், தமிழக அரசின் நீட் மசோதாக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்துவிட்டார். ஆனால், தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதாக்களை மத்திய அரசு திருப்பி அனுப்பியதை சட்டத்துறை அமைச்சர் மறைத்துவிட்டார் என்று மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

 tamilnadu assembly... CV Shanmugam in Action

இதற்கு பதிலளித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் சண்முகம், நீட் விவகாரத்தில் நான் எந்த தவறான தகவலும் கூறவில்லை. மசோதாக்கள் திரும்பி வந்தால் சட்டம் இயற்ற தயாராக இருக்கிறோம். நீட் விவகாரத்தில் நான் பொய் சொல்லியதை நிரூபித்தால் பதவி விலகத்தயார் என்றார். நீட் மசோதாக்கள் நிராகரிக்கப்படவில்லை. நிறுத்திவைக்கப்பட்டுள்ளன என்று பதிலளித்தார். tamilnadu assembly... CV Shanmugam in Action

சட்டப்பேரவையில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு சட்டத்துறை அமைச்சர் கொடுத்த பதில் திருப்தியளிக்கவில்லை என்று கூறி எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மு.க.ஸ்டாலின், நீட் தேர்வு விவகாரத்தில் கடந்த 19 மாதங்களாக மக்களளை தமிழக அரசு ஏமாற்றி உள்ளது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரும் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்ட விவகாரத்தில் முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்துள்ளார் அமைச்சர் சண்முகம் என்று குற்றம்சாட்டினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios