அண்மையில் நடைபெற்ற  மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. தூத்துக்குடி, சிவகங்கை, கோவை, கன்னியாகுமரி ராமநாதபுரம் ஆகிய 5 தொகுதிகளில் போட்டியிட்டது.

ஆனால் ஒன்றில் கூட பாஜக செற்றி பெறவில்லை..அதேபோல் அதிமுகவும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.மேலும் பாஜக தோல்விக்கு காரணம் தமிழகத்தில் இருந்த எதிர்ப்பு அலை தான் காரணம் என்று கூறப்பட்டு வருகிறது.

இதற்கு ஏற்ற வகையில் தற்போது தமிழிசையின் வீட்டிலே ஒரு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.அது வேறுயாரும் இல்லை அவரது மகன் சுகநாதன் தான்.

நேற்று சென்னை விமான நிலையத்தில் தமிழிசை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துக்கொண்டிருந்தார்.அப்போது திடீரென்று அவரது மகன் சுகநாதன்  தமிழிசைக்கு எதிராகவும் பாஜகவிற்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினார்.

பாஜக ஒழிக ! மோடி ஒழிக ! தமிழிசை ஒழிக ! என அவர் முழுக்கமிட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


இதையடுத்து அங்கிருந்த தமிழிசையின் பாதுகாவலர்கள் அவரை அங்கிருந்து அழைத்து சென்றனர். பின்னர் இது தொடர்பாக தமிழிசை செய்தியாளர்களிடம் கூறுகையில்,எனக்கும் என்னுடைய மகனுக்கும் குடும்ப பிரச்சினை உள்ளது.அதனால் அவர் பாஜகவிற்கு எதிராக முழக்கமிட்டதாக தெரிவித்தார்.