தமிழக பாஜ தலைவர் தமிழிசை தன்னை மகாராணி போலவும், குட்டி ஜெயலலிதா போலவும் நினைத்துக் கொள்கிறார் என தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். 

தமிழகபாஜகதலைவர்தமிழிசைசவுந்தரராஜன்சென்னையிலிருதுதூத்துக்குடிசெல்லும்விமானத்தில்நேற்றுபயணம்செய்தார். தூத்துக்குடிவிமானநிலையத்தில்அவரைபார்த்ததும்சோபியாஎன்றபெண் பாசிச பாஜகஒழிகஎனகோஷமிட்டுள்ளார். இதனைஅடுத்து, தமிழிசைசவுந்தரராஜனுக்கும்அந்தபெண்ணுக்கும் இடையே வாக்குவாதம்ஏற்பட்டது

பின்னர், அங்கிருந்தபோலீசார்அவரைசமாதானப்படுத்தினர். கோஷமிட்டஇளம்பெண்ணுக்குஎதிராகவிமானநிலையஅதிகாரிகளிடம்தமிழிசைசவுந்தரராஜன்புகார்அளித்தார்

விசாரணையில், கோஷமிட்டதாகசொல்லப்படும்அந்தஇளம்பெண், தூத்துக்குடியைச்சேர்ந்தமருத்துவரின்மகள்சோபியாஎன்பதும், தற்போதுஅவர்கனடாவில்படித்துவருவதும்தெரியவந்தது. இதனைஅடுத்து, சோபியாவைகைதுசெய்தபோலீசார், அவரைநீதிபதிமுன்ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்ப்பட்டது.

ஆனால் சோபியா இன்று நண்பகலில் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நெட்சன்கள் இந்த பிரச்சனையை சமூக வலைதளங்களில் டரெண்டிங் ஆக்கிவிட்டார்கள்.

அனைத்து வலைதளங்களிலும் பாசிச பாஜக ஒழிக என்ற ஸ்லோகன் தான் காணப்பட்டது.அதே நேரத்தில் ஒரு மூத்த தலைவர் பொது இடத்தில் பக்குவமாக நடந்திருக்க வேண்டும் என்றும் மாணவி சோபியாவை அழைத்து தனது விளக்கத்தை அளித்திருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு அந்த மாணவி மீது புகார் அளித்து, அவரை சிறையில் தள்ளி இருக்க வேண்டாம் என பரவலாக ஒரு கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், தமிழிசை ஒரு சர்வாதிகாரி போல நடந்து கொள்கிறார் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் பொது வாழ்வு என்று வந்துவிட்டால், சில சங்கடங்களை தாங்கித் தான் ஆக வேண்டும் என கூறினார். தமிழிசை தன்னை மகாராணி போலவும், குட்டி ஜெயலலிதா போலவும் நினைத்துக் கொள்கிறார் என்று கிண்டல் செய்தார்.