தமிழிசையின் முதல் அதிரடி..! "முடிவெடுக்கும் அதிகாரம் இல்லை... முடித்து வைக்கும் அதிகாரம் உண்டு"..! 

வரும் 8ம் தேதி தெலுங்கானா ஆளுநராக பதவி ஏற்க உள்ள தமிழிசை சௌந்தரராஜன் அளித்துள்ள ஒரு பேட்டியில் பல்வேறு சுவாரஸ்ய தகவலை பகிர்ந்து உள்ளார்.

அப்போது, "ஆளுநராக நியமனம் செய்து உள்ளனர் என்ற செய்தி வெளியான அடுத்த நொடியில் இருந்தே தொடர்ந்து எனக்கு வாழ்த்துக்கள் வந்தவண்ணம் இருந்தன... குறிப்பாக கட்சி தொண்டர்களையும் தாண்டி எதிரணியில் இருக்கக்கூடிய நபர்களும் கூட ஓரணியில் திரண்டு வந்து அடுத்தடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தது எனக்கு மிகவும் பெருமையை கொடுத்தது.. மகிழ்ச்சியாக உணர்ந்தேன்.

கட்சியிலிருந்து.... ஆளுநராக பதவி ஏற்க இருந்தாலும் தமிழகத்தில் பாஜகவிற்காக இதுவரை 40 லட்சம் உறுப்பினர்களை சேர்த்து வைத்து இருக்கிறேன். பாஜக கட்சி தொண்டர்கள் தம்பிகள் அனைவரும் என்னை "அக்கா அக்கா" என்ன அழைப்பதும் என்னைவிட மூத்தவர்கள் தங்கை தங்கை என அழைப்பதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது...

நான் தமிழ் கற்று  தமிழ் பேசவில்லை தமிழ் பெற்றதால் தமிழ் பேசுகிறேன்.. நான் சிறிய வயதாக இருக்கும்போது எனக்கு பெயர் வைக்க அப்பா கோவிலுக்கு கூட்டிட்டு போனார் இப்போது பெயர் வாங்கின பிறகு கோவிலுக்கு அழைத்து சென்று குங்குமம் வைத்து உள்ளார்.. எனக்கு புத்தகங்கள் படிக்கும் பழக்கம் அதிகம். தமிழ் மீது அதிக ஆர்வம் கொண்டவள்...

என் தந்தையை போலவே எனக்கும் தமிழ் என்றால் உயிர் மூச்சு என்று தான் சொல்வேன்.. ஆளுநர் பதவியை பற்றி சொல்ல வேண்டுமென்றால் "முடிவெடுக்கும் அதிகாரத்தில் இல்லை என்றாலும் முடித்து வைக்கும் அதிகாரத்தில் இருக்கிறேன்" என்பதை சொல்ல முடியும் என சரவெடி பதிலை பதிவு செய்து உள்ளார் தமிழிசை