Asianet News TamilAsianet News Tamil

கர்நாடகாவைப்போல் தமிழகத்தில் பாஜக வலுப்பெறும்... தமிழிசை ஆரூடம்...!

கர்நாடகாவைப்போல் தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களிலும் பாஜக வலுப்பெறும் என பாஜக தலைவர் தமிழிசை கூறியுள்ளார். 

tamilisai speech
Author
Tamil Nadu, First Published Jul 24, 2019, 1:39 PM IST

கர்நாடகாவைப்போல் தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களிலும் பாஜக வலுப்பெறும் என பாஜக தலைவர் தமிழிசை சூசகமாக பேசியுள்ளார். 

கர்நாடக சட்டப்பேரவையில் 4 நாட்களுக்கு நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகள் மட்டுமே பதிவாகின. எதிராக 105 வாக்குகள் பதிவாகின. இதனால் பெரும்பான்மையை இழந்த முதல்வர் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது. தனது முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்தார். tamilisai speech

இதனையடுத்து, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 4-ஆக குறைந்துள்ளது. கர்நாடகாவில் ஆட்சி கவிழ்ந்துள்ள நிலையில், பஞ்சாப், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் மட்டுமே தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அதேசமயம், பா.ஜ.க. 16 மாநிலத்தில் ஆட்சி அதிகாரத்தில் உள்ளது. tamilisai speech

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழிசை, கர்நாடகாவைபோல், தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களிலும் தாமரை மலரும். தமிழை நாங்கள் தான் காப்பாற்றி வருகிறோம் என்று மு.க.ஸ்டாலின் சொல்லி வருகிறார். இது தமிழ்தாய்க்கு பொறுக்காது. தமிழை யாரும் காப்பாற்ற வேண்டிய அவசியம் இல்லை. தமிழ் ஒரு முதுமொழி. என்றும் இளமையான மொழி. இந்தியை மத்திய அரசு திணிக்க வேண்டிய அவசியம் இல்லை. தபால்துறை, ரெயில்வே துறையிலும் இந்தியை திணிக்க வேண்டிய எண்ணம் மத்திய அரசுக்கு கிடையாது. தமிழின் பெருமையை போற்றுவதில் பா.ஜ.க முதன்மையான கட்சியாக இருக்கும் என தமிழிசை கூறியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios