தமிழகத்தை அதிமுக சீரழித்துவிட்டது, மத்திய அரசு திட்டங்களை எதிர்க்கிறது என்று தமிழிசை கூறியுள்ளது கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது. 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பாஜக கட்சி உறுப்பினர் சேர்க்கை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தமிழிசை கெயில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை அரசியல் செய்வதற்காக எதிர்க்கட்சிகள் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்த்து வருகின்றன. அதேபோல் காங்கிரஸ் கட்சி மத்தியில் 10 ஆண்டுகள் ஆட்சி செய்த போது தமிழகத்தில் இருந்து ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட்டு வந்தது. தமிழக மாணவர்கள் நீட் தேர்வின் அவசியத்தை பற்றி நன்கு புரிந்து வைத்துள்ளார்கள். 

ஆனால் இங்கு இருக்கும் எதிர்க்கட்சிகள் மற்றும் கூட்டணி கட்சிகள் நீட்டை வைத்து அரசியல் செய்து வருகின்றனர். வசதிபடைத்தவர்கள் மட்டுமே மும்மொழி கொள்கையை பயன்படுத்தி  தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளியில் படிக்க வைத்து வருகின்றனர். ஏழை மக்களுக்கு புதிய கல்வி கொள்கையை எடுத்து செல்வதற்கு எதிர்க்கட்சிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. அவர்களும் மற்ற மொழிகளை கற்கக்கூடாது என்பதற்காகவே என்றார்.

அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகள் தமிழகத்தை சீரழித்துவிட்டனர் என்று குற்றம்சாட்டியுள்ளார். இவரது பேச்சு அதிமுக கூட்டணிக்குள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.