Asianet News TamilAsianet News Tamil

தண்ணீர் தாகம் தீர்ந்தாலும் ஸ்டாலினின் பதவி தாகம் தீராது... காய்ச்சி எடுக்கும் தமிழிசை..!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் சென்றதற்கு பதிலாக பெங்களூர் சென்று தண்ணீர் கூட்டணி கட்சியாக கர்நாடக காங்கிரசிடம் தண்ணீர் கேட்டிருக்கலாம் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். 

tamilisai speech
Author
Tamil Nadu, First Published Jun 25, 2019, 2:27 PM IST

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் சென்றதற்கு பதிலாக பெங்களூரு சென்று தண்ணீர் கூட்டணி கட்சியாக கர்நாடக காங்கிரசிடம் தண்ணீர் கேட்டிருக்கலாம் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். 

தமிழகத்தில் இந்த ஆண்டு தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இதனால், சென்னையில் ஓட்டல்கள் மற்றும் ஐடி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளனர். மேலும் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த  2 நாட்களுக்கு முன்னர் தண்ணீர் பற்றாக்குறையைப் போக்க தமிழக அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி மாவட்ட தலைநகரங்களில் திமுகவினர் போராட்டம் நடத்தினர். மேலும், நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில்  ஆர்பட்டாம் நடைபெற்றது.

 tamilisai speech

இந்நிலையில், திமுக ஆர்ப்பாட்டம் தொடர்பாக தமிழிசை விமர்சனம் செய்துள்ளார். அதில் சிங்கார சென்னையை சிங்கப்பூர் ஆக்குவேன் என்று சென்னை மேயராக இருந்த போது சொன்ன தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின். . தற்போது தான் மட்டும் சிங்கப்பூர் சென்றுவிட்டு வந்து இங்கே தண்ணீர் எங்கே என்று போராடுகிறார். tamilisai speech

சிங்கப்பூர் சென்றதற்கு பதிலாக பெங்களூர் சென்று அவர்களின் கூட்டணி கட்சியான கர்நாடக காங்கிரஸ் நீர் பாசன அமைச்சரிடம் காவிரி மேலாண்மை வாரிய ஆணைப்படி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்றும் மேகதாதுவில் அணை கட்ட வேண்டாம் என்றும் கேட்டுவிட்டு வந்து இங்கே போராடி இருந்தால் அவரை பாராட்டி இருக்கலாம். மக்களின் தாகத்தை அரசியலாக்கி தங்களின் பதவி தாகத்துக்குப் போராடுவதா? இதுபோன்ற திமுகவின் நாடகங்களை மக்கள் அடையாளர் கண்டுகொள்வார்கள் என தமிழிசை கூறியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios