Tamilisai Soundararajan makes fun of M.K.Stalin
முதலமைச்சரை பதவி இறக்காமல் சட்டமன்றத்துக்குள் நுழைய மாட்டேன் என்று கூறிய ஸ்டாலின் நாளை சட்டமன்றத்துக்கு செல்வதாக அறிவித்தது ஏன் என்று தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தூத்துக்குடி கலவரத்தைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட அதிமுக அரசு அமைச்சரவையைக் கூட்டாமல் தனியாக அரசாணை பிறப்பித்தது. அதிமுக
வெளியிட்ட இந்த அரசாணைக்கு எளிதில் மறுப்பு வாங்கி விட முடியும். எனவே அமைச்சரவையைக் கூட்டி அரசாணை ளியிட வேண்டும் என்று சட்டமன்ற
கூட்டத்தொடரின் முதல்நாளின்போது, திமுக செயல் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். மேலும் பொதுமக்கள் 13
பேரின் உயிரிழப்புக்கு காரணமான போலீசார் மீது வழக்கு பதிய வேண்டும் என்றும், துப்பாக்கிச்சூட்டில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் பதவி விலக
வேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்று கூறி கூட்டத்தொடரை புறக்கணிக்கப்போவதாக அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக சார்பில் மாதிரி சட்டமன்றம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், சட்டப்பேரவைக் கூட்டத்தில் நாளை முதல் பங்கேறுக்கும் என்று முடிவு செய்யப்பட்டதாக கூறினார்.
மு.க.ஸ்டாலினின் இந்த முடிவு குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது டுவிட்டரில் கிண்டலாக பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், போட்டி சட்டமன்றத்தில்கூட முதலமைச்சராக முடியாத ஸ்டாலின், முதலமைச்சரைப் பதவி இறக்காமல் நுழையமாட்டேன் என்ற சவாலைக் கைவிட்டுவிட்டு மீண்டும் நாளை ஜனநாயக கடமை ஆற்றச் செல்வதாக சொல்வது ஏன்? போட்டி சட்டமன்ற நாடகம் ஒரே நாளில் போணியாகாமல் போனதால்தானே? தொடர்ந்து வெளிநடப்பு வழிநடத்தும் தலைவராக பணியாற்றுக என தமிழிசை சௌந்தரராஜன் பதிவிட்டுள்ளார்.
