திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெள்ள நிவாரணப் பணிகளில் கூட, அரசியல் செய்கிறார் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை விமர்சனம் செய்துள்ளார்.

  

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழிசை தமிழகத்தை பொறுத்தவரை, ஆக்கப்பூர்வமான அரசியலை முன்னெடுத்து செல்வதே உங்களின் குறிக்கோளாகும். 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டு, காஷ்மீர் மறு சீரமைக்கப்பட்டுள்ளது. இதை, தமிழக உள்ளிட்ட பல்வேறு மாநில மக்கள் வரவேற்கின்றனர். காஷ்மீர் விவகாரத்தின் உண்மை தன்மையை அறிந்த, நடிகர் ரஜினி ஆதரவு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு மக்களின் குரலாக, ரஜினியின் குரல் ஒலிக்கிறது. 

காஷ்மீர் மறு சீரமைப்பிற்கு, இளைஞர்கள் முழு ஆதரவு தெரிவித்துள்ளனர். காஷ்மீரில் கல் எறிந்தவர்கள், தற்போது, கல்வி அறிவு பெற உள்ளனர். காஷ்மீர் விவகாரத்தில், நல்ல முடிவு எடுக்கப்பட்டதை ஏற்க முடியாமல், சிலர் எதிர்க்கின்றனர். தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வேண்டும். தேர்தல் தள்ளிப்போனதற்கு, தி.மு.க. தான் காரணம். மு.க. ஸ்டாலின், எதை எடுத்தாலும் விளம்பர அரசியல் செய்து வருகிறார். வெள்ள நிவாரண பணிகளில் கூட அரசியல் செய்கிறார். அனைத்திலும், அவருக்கு விளம்பரம் தேவைப்படுகிறது என தமிழிசை கூறியுள்ளார்.