tamilisai pressmeet about minister saroja

சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா மீது குழந்தைகள் நல வளர்ச்சி பெண் அதிகாரி ஒருவர் லஞ்ச ஊழல் தொடர்பாக தெரிவித்துள்ள குற்றச்சாட்டு தமிழகத்தில் ஊழல் மலிந்திருப்பதற்கு உதாரணம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்ததரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் தற்போது மழை பெய்யத் தொடங்கியுள்ளது என்றும், இந்த மழை நீரை அரசு முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் ஊழல் அதிகமாகவே காணப்படுவதாகவும், சமூக நலத்துறை அதிகாரி ஒருவர் ,அமைச்சர் சரோஜா மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டை சுமத்தியிருப்பதே இதற்கு உதாரணம் என்று தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் அரசுப் பதவிகள் விற்பனைக்கு வந்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

லஞ்சம் வாங்கிய அமைச்சர்களின் பட்டியலை வருமான வரித்துறையினர் தமிழக அரசு தலைமைச் செயலாளருக்கு அனுப்பியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள தமிழிசை,இது போன்று வேறு எங்காவது நடந்திருக்கிறதா என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஊழல் அமைச்சர்கள் மீது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழிசை வேண்டுகோள் விடுத்துள்ளார்.