தோற்றாலும் சொன்ன வாக்கை காப்பாற்றும் தமிழிசை..! 

தமிழகம்  மற்றும் தமிழக மக்களின் மீது பாஜகவிற்கு எப்போதும் ஒரு தனி அக்கறை உள்ளது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட்ட தமிழிசை இவருக்கு எதிராக திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழியை விட 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது சில கருத்துக்களை பகிர்ந்தார் 

அப்போது பேசிய தமிழிசை, தமிழகத்தின் மீது பாஜகவுக்கு அதிக அக்கறை உள்ளது என்றும், மத்திய அமைச்சரவையில் இடம் கொடுப்பது பற்றி பிரதமர் நரேந்திர மோடி தான் முடிவு செய்வார் என்றும், இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்க பாஜக கூட்டணி தலைவர்கள் மட்டுமல்லாது பல்வேறு நபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கூட்டணி கட்சிகளுக்கு எம்பி பதவி இருந்தாலும் அமைச்சரவை கிடைத்துவிடும் என கூறமுடியாது.கடந்த ஐந்து வருடங்களில் தமிழகத்திற்கு மட்டுமே ஐந்து லட்சம் கோடி அளவிற்கு பல்வேறு நல்ல திட்டங்கள் கொண்டுவரப்பட்டது. திமுக தலைவர் மு க ஸ்டாலின் பிரிவினைவாதத்தை பேசத்தொடங்கி தேச ஒற்றுமைக்கு எப்போதும் குந்தகம் விளைவிக்கிறார். 

ஆனால் நாங்கள் தமிழக மக்கள் மீது அதிக அக்கறை வைத்துள்ளோம். தூத்துக்குடியில் தோல்வியடைந்தாலும்,அந்த தொகுதி மக்களுக்கு என்னுடைய சேவையை தொடர்ந்து செய்வேன். அதற்காக அடுத்த வாரம் தூத்துக்குடியில் மிகப்பெரிய மருத்துவ முகாமிற்கு ஏற்பாடு செய்து வருகிறேன் என தெரிவித்து உள்ளார். 

தூத்துக்குடி தொகுதியயில் போட்டியிட்டு, வெற்றி பெறாவிட்டாலும் வாக்கு தவறாமல் அந்த தொகுதி மக்களுக்கு சேவை செய்ய ஆயத்தமாகி உள்ளார் தமிழிசை. இவருக்கு தொண்டர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.