tamilisai interview at bjb office

தி.நகர் பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் தமிழிசை பத்திரிகையாளர்களை சந்தித்தவர் பா.ஜ.கவின் தமிழகத் தலைவர் தமிழிசை இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். இதில் பா.ஜ.கவின் 4 ஆண்டுகளில் செய்த சாதனைகளை எடுத்துச் சொல்ல ஓராண்டு போதாது எனக் கூறினார். 70% கருத்துக்கணிப்பு மோடி ஆட்சியே வருவார் எனத் தெரிவிக்கிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களை மத்திய அரசி செயல்படுத்தியுள்ளது என்றும் தெரிவித்தார். ஜந்தன் திட்டத்தில் ஜூரோ பேலன்ஸ் திட்டத்தின்மூலம் சிறு குறுவணிகர்களும் பெரிதும் நன்மை அடைந்துள்ளனர் என்றும் கூறினார். மத்திய அரசின் கீழ் வழங்கப்படும் கடன்களில் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு குறிப்பிட்ட விகிதாச்சாரமும் பெண்களுக்கு கடன் உதவிகள் அதிகம் வழங்கப்படுகின்றன என தெரிவித்தார். 

மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்துள்ளது என்றும் கேஸ் மானியங்கள் யாவும் மக்களின் நேரடி அக்கவுண்ட்டில் போடப்படுகிறது எனத் தெரிவித்தார். பா.ஜ.கவைப் பற்றி எதிர்மறை தகவலகள் வேகமாக பரவுகின்றன. காவிரியைப் பெற்றுதந்தது மத்திய அரசுதான் எனக்கூறினார்.

தூத்துக்குடியின் சட்டம் ஒழுங்கு மாநில அரசின் கையில் இல்லை மத்திய அரசின் கையில்தான் உள்ளது எனத் தெரிவித்தார். ஆளும் கட்சியாக இருந்தபோது ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி அளித்து விட்டு ஸ்டாலின் இன்று போராடுகிறேன் என்ற பெயரில் ஏசி மண்டபத்தில் இருக்க விரும்புகிறார். எனப் பேசினார்.