நீட் தேர்வு விவகாரத்தில், தமிழக மாணவர்களை தி.மு.க. செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், தேவையின்றி குழப்பி வருவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், நீட் தேர்வு விவகாரத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குழப்பத்தை உண்டாக்குவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மதுரை விமான நிலையத்தில், தமிழிசை சௌந்திரராஜன் செய்தியார்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படியே நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட்டதாக கூறினார்.

நீட் தேர்வு விவகாரத்தில், தமிழக மாணவர்களை மு.க.ஸ்டாலின் தேவையின்றி குழப்பி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். 

காங்கிரஸ் ஆட்சியில் நீட் தேர்வுக்கான ஆரம்பப்புள்ளி தொடங்கியபோது, திமுக ஏன் அப்போதே எதிர்க்கவில்லை எனவும் தமிழிசை சௌந்திரராஜன் கேள்வி எழுப்பினார்.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி திமுக நாளை மனித சங்கிலி போராட்டம் நடத்த உள்ளது. இதற்கான அனுமதியும் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.