இப்ப மட்டும் வாங்க....அப்ப என்ன செய்தீங்க...? அன்புமணி ராமதாசுக்கு சவால் விட்ட தமிழிசை...! எதுக்கு தெரியுமா..?

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

ஜூலை 9 ஆம் தேதி அமித்ஷாவின் தமிழக வருகை குறித்தும், தமிழகத்தில் தேர்தலை அணுகுவதை குறித்தும், பாஜகவின் தேசிய  செயலாளர் முரளிதர ராவ் தலைமையில் ஆலோசனை கூட்டம் பாஜக தலைமை அலுவலகத்தில் நடைப்பெற்றது.

கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை.அன்புமணி ராமதாசுக்கு கேள்வி மேல் கேள்வி எழுப்பி போட்டு தாக்கினர்.

அப்போது, "நான் யாரையும் மரியாதை இல்லாமல் பேசுவது...பேசினதும்  கிடையாது...ஆனால் அவரோ மரியாதை தெரியாமல் பேசி வருகிறார்....

ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில், "மரத்தை வெட்டுபவர்களே இப்ப 8 வழிச் சாலை பற்றி பேசலாமா என்ற கேள்வியை தான் முன்வைத்தேன்...

அதற்காக, "தலைவராக இருக்க எனக்கு தகுதி இல்லை என்றும்..ஐயோ ஐயோ இவங்கலாம் போயி தலைவர்னு" விமர்சனம் செய்துள்ளார்  மரியாதைகுரிய அன்புமணி ராமதாஸ் என தெரிவித்து இருந்தார்

மேலும், சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த அன்புமணி அப்போது  தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வர என்ன முயற்சி செய்தார்...? ஆனால் தற்போது தமிழக மக்கள் நலன் கருதி, எய்ம்ஸ்  மருத்துவமனையை கொண்ட வந்தது மத்திய பாஜக என பெருமையாக கூறுகிறார் தமிழிசை

மேலும் இது குறித்து விவாத மேடையில் பேசுவதற்கு தயாரா எனவும் கேள்வி எழுப்பி உள்ளார்.

நான் ஒரு அரசியல் வாரிசு தான், ஆனால் அடிமட்டத்தில் இருந்து தொண்டு செய்து, தீயாய் உழைத்து பின்னர் தான் நான் இந்த நிலைமைக்கு வந்துள்ளேன்..ஒரு தலைவியாக இருக்க என்னவெல்லாம் தேவையோ அத்தனை அரசியல் அனுபவங்களை நான் பெற்று உள்ளேன் என தெரிவித்து இருந்தார் தமிழிசை..எனவே என்னுடைய அரசியல் தகுதி பற்றி யாரும் விமர்சனம் செய்ய தேவை இல்லை...

மற்றவர்களை போல,அதாவது ராமதாஸ் நிழலில் அவர் வந்துள்ளார்.. இதே போன்று தான் மற்றவர்களும் என திமுகவையுயும் சேர்த்து பிழிந்து எடுத்து உள்ளார் தமிழிசை.