திமுகவால் தமிழகத்தில் அதிமுகவை அசைக்க முடியவில்லை. பாஜகவை என்ன செய்ய முடியும் என சவால் விடுவது போல் பேசுயுள்ளார் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன். 

திமுகவால் தமிழகத்தில் அதிமுகவை அசைக்க முடியவில்லை. பாஜகவை என்ன செய்ய முடியும் என சவால் விடுவது போல் பேசுயுள்ளார் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் பா.ஜனதா மாநில செயற்குழு கூட்டம் நாளை நடக்கிறது. இதில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொள்வதற்காக மதுரை வந்துள்ளார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.

ஸ்டாலின் பாசி‌ஷ பாஜக ஒழிக என்று கூறுகிறார். ஆனால், அவரது கட்சியினர் கள்ளத் துப்பாக்கி, பிரியாணி கடையில் பஞ்சாயத்து, அழகு நிலையம், பேன்சி கடைகளில் நடத்தும் அராஜகம் அடாவடி செய்கிறார்கள்.

பண மதிப்பீடு இந்தியாவை செம்மைப்படுத்தி இருக்கிறது. திமுகவால் தமிழகத்தில் அதிமுகவை அசைக்க முடியவில்லை. பாஜகவை என்ன செய்ய முடியும். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வந்தாலும், திருவாரூர் இடைத்தேர்தல் வந்தாலும், பாஜக போட்டியிட தான் விருப்பம்.

தமிழகத்தில் எந்த தேர்தல் வந்தாலும் ஆள் பலம், பண பலம், படை பலம் இல்லாமல் தேர்தல் நடந்தால் நல்லது. நேர்மையான தேர்தல் நடத்த வேண்டும் என்பதே எனது விருப்பம். பாஜக அரசு பெட்ரோல் விலையை தொடர்ந்து கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சி செய்கிறது.

ஊழல் புகாரில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் யாராக இருந்தாலும் வழக்குகளை சந்திக்கட்டும். இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்டதில் திமுக முறையான நடவடிக்கை எடுத்திருந்தால் இலங்கைத் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள். காங்கிரசுடன் கூட்டணி வைத்துக் கொண்டு நாடகமாடியது என்றார்.