இரண்டு நாட்களுக்கு முன்பு திருப்பூரில் நடிகர் அஜித்குமார் ரசிகர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தமிழிசை முன்பு பாஜகவில் இணைந்தனர். இதைத் தொடர்ந்து பேசிய தமிழிசை, அஜித்குமார் மிகவும் நல்லவர், நேர்மையானவர் என்றெல்லாம் புகழ்ந்து அவரையும் பாஜகவைச் சேர்ந்தவர் போல் சித்தரித்து பேசினார்.

இதனால் கடுப்பான நடிகர் அஜித்குமார் திடீரென அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் தான் சினிமாவில் தொழில் முறையாக வந்தவன் எனவும், அரசியல் செய்யவோ, மற்றவர்களுடன் மோதவோ வரவில்லை என தெரிவித்துள்ளார்.

அரசியலில் தனக்கு தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு உண்டு எனவும், அதனை யார் மீதும் திணிப்பது இல்லை, மற்றவர்கள் கருத்தை தன் மேல் திணிக்க விட்டதும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தன் பெயரோ, புகைப்படமோ எந்தவொரு அரசியல் நிகழ்விலும் இடம்பெறுவதை சற்றும் விரும்பவில்லை எனவும், தங்கள் கடமையை முறையாக செய்வதுடன், சட்டம் ஒழுங்கை மதித்து நடக்க வேண்டும் எனவும் அஜித் தமிழிசைக்கு பதிலடிகொடுத்துள்ளார்.

அஜித்தின் இந்த அறிக்கையால் அதிர்ச்சி அடைந்த தமிழிசை  பாஜகவில் இணையும் ரசிகர்களை அஜித் தடுக்க முடியாது என்றும் முடிந்தால் அரசியலில் இறங்கி பாஜகவை அஜித்தால் ஜெயிச்சுக் காட்ட முடியுமா ? என சவால் விட்டுள்ளார்.