நிலமற்ற கூலிகளாக தமிழர்கள் மாற்றப்படுவார்கள் - சீமான் எச்சரிக்கை
தமிழகத்தில் நாளுக்கு நாள் வடமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ஒரு கட்டத்தில் தமிழகத்தில் தமிழர்கள் பிச்சை எடுக்கக்கூட முடியாத அளவிற்கு மாற்றப்பட்டு நிலமற்ற கூலிகளாக நிற்பார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வரும் வடமாநில தொழிலாளர் எண்ணிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இது தொடர்பாக பேசுகையில், தமிழகத்தில் இலவசங்கள், நூறுநாள் வேலை திட்டம் உள்ளிட்ட திட்டங்களால் தமிழர்கள் சோம்பேறிகளாக மாற்றப்பட்டுள்ளனர்.
அரியலூரில் புயல் வேகத்தில் சென்ற தனியார் பேருந்து கவிழ்ந்து ஒருவர் பலி, பலர் படுகாயம்
விவசாயம் தொடங்கி கட்டிட வேலை வரை அனைத்து வேலைகளுக்கும் பணியாளர்கள் தேவைப்படுகின்றார்கள். ஆனால், இந்த வேலைகளை செய்ய தமிழர்கள் முன்வருவதில்லை. இங்கு ஏற்பட்டுள்ள பணியாளர் தேவையை வடமாநில தொழிலாளர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். வடமாநில தொழிலாளர்களை அப்புறப்படுத்தவோ, திட்டங்களை மாற்றி அமைக்கவோ தற்போதைய ஆட்சியாளர்களால் முடியாது. நாம் தமிழர் கட்சியால் மட்டுமே இதனை செய்ய முடியும்.
கோவையில் தீ பிடித்து எரிந்த பேருந்து: கீழே குதித்து உயிர் தப்பிய பயணிகள்
தமிழகத்தில் அமைந்துள்ள பெருந்துறை தொகுதி தற்பொது வடமாநில தொழிலாளர்களுக்கான தொகுதியாக மாறியுள்ளது. அந்த அளவிற்கு அப்பகுதியில் வடமாநிலத்தவர்கள் அதிகரித்துள்ளனர். தற்போதைய சூழலில் கட்டிட வேலை, விவசாயம் உள்ளிட்ட பணிகளுக்கு தான் பணியாளர் தட்டுப்பாடு நிலவுகிறது. வரும் காலத்தில் தமிழகத்தில் தமிழர்கள் பிச்சை கூட எடுக்க முடியாத அளவிற்கு வடமாநிலத்தவர்களின் ஆதிக்கம் இருக்கும்.
அப்போது நிலமற்ற கூலிகளாக தமிழர்கள் மாற்றப்படுவர்கள். இந்த நிலையை தடுக்க நாம் தமிழர் கட்சியால் மட்டுமே முடியும் என்று தெரிவித்துள்ளார்.