Asianet News TamilAsianet News Tamil

கமல் கட்சியில் இருந்து வந்த மகேந்திரனின் சம்பந்தி ஆனார் தமிழச்சி தங்கப்பாண்டியன்.. ஸ்டாலின், துர்கா வாழ்த்து!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மகேந்திரன் கோவை மேயர் தேர்தலில் களமிறக்கப்படுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் அவருடைய இல்ல சுபநிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி திமுக நிர்வாகிகள் வரை ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். 

Tamilchi Thangapandiyan became related to Mahendran who came from Kamal party .. Stalin, Durga greetings!
Author
Chennai, First Published Nov 15, 2021, 11:25 PM IST

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகி சில மாதங்களுக்கு முன்பு திமுகவில் சேர்ந்த மகேந்திரனின் சம்பந்தியாகியிருக்கிறார் திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன்.

தென்சென்னை திமுக எம்.பி.யும் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் சகோதரியுமான தமிழச்சி - சந்திரசேகர் ஐபிஎஸ் ஆகியோருடைய மகள் டாக்டர் நித்திலாவுக்கும், தகவல் தொழில்நுட்ப திமுக மாநில இணைச் செயலாளர் மகேந்திரனின் மகன் டாக்டர் கீர்த்தனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற இந்த விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின்,  அவருடைய மனைவி துர்கா ஸ்டாலின், எம்எல்ஏ உதயநிதி, அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் பங்கேற்று மணமக்களை ஆசிர்வதித்தனர். Tamilchi Thangapandiyan became related to Mahendran who came from Kamal party .. Stalin, Durga greetings!

திமுகவில் தகவல் தொழில்நுட்ப இணைச் செயலாளராக இருக்கும் டாக்டர் மகேந்திரன், சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வரும் வரை கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் துணைத் தலைவராக இருந்தவர். சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு அவர் தோல்வியடைந்தாலும், ஓட்டுகள் பிரிப்பு மூலம் திமுக வேட்பாளரின் தோல்விக்குக் காரணமாக இருந்தார். பின்னர் கமலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகி, திமுகவில் இணைந்தார் மகேந்திரன். அவருக்கு தகவல் தொழில்நுட்ப மாநில இணைச் செயலாளர் பதவி திமுகவில் வழங்கப்பட்டது.Tamilchi Thangapandiyan became related to Mahendran who came from Kamal party .. Stalin, Durga greetings!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மகேந்திரன் கோவை மேயர் தேர்தலில் களமிறக்கப்படுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் அவருடைய இல்ல சுபநிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி திமுக நிர்வாகிகள் வரை ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் மகேந்திரன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ எத்தனை நன்றிகள் சொன்னாலும் தீராது.. எங்கள் அழைப்பை ஏற்று குடும்பத்தினருடன் மண உறுதி ஏற்பு விழாவிற்கு நேரில் வருகை தந்து மனமார வாழ்த்துகளை வழங்கிய தலைவர்,  தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகளும் தீரா அன்பும்" என்று தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios