Asianet News TamilAsianet News Tamil

குற்றவாளி ஜெயலலிதாவை மக்கள் தூற்றவில்லை! நிரபராதி என ராசா, கனிமொழியை மக்கள் ஏற்கவில்லை”: தெறிக்கவிடும் தமிழருவி.

tamilaruvi maniyan political comments against Rasa Kanimozhi and jayalalithaa
tamilaruvi maniyan political comments against Rasa Kanimozhi and jayalalithaa
Author
First Published Jan 3, 2018, 6:53 PM IST

ரஜினிகாந்த் அரசியல் பிரவேசத்தை அறிவிப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பிருந்தேரஜினி நிச்சயம் தனி கட்சி துவங்குவார்! துவங்குவார்!’ என்று சொன்னதோடு மட்டுமில்லாமல், ரஜினியின் ரசிகர்களை வைத்து திருச்சியில் பெரும் பொதுக்கூட்டத்தையே நடத்திக் காட்டியவர் தமிழருவி மணியன்.

இப்போது ரஜினி அரசியல் பிரவேசத்தை அறிவித்துவிட, தமிழருவிக்கு பாதங்கள் தரையிலில்லை. ரஜினியின் அடுத்த மூவ், அரசியல் திட்டமிடல்கள் பற்றி சில விஷயங்களை கொளுத்திப் போட்டுக் கொண்டிருப்பது இவர்தான்.

tamilaruvi maniyan political comments against Rasa Kanimozhi and jayalalithaa

இந்நிலையில், ரஜினியின் அரசியல் பிரவேசத்தையும், தி.மு..வையும் முடிச்சுப்போட்டு எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்திருக்கும் தமிழருவி...

குற்றவாளி - என தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயலலிதாவை இன்னமும் தமிழகத்தின் பெரும்பான்மையான மக்கள் மக்கள் குற்றவாளியாகவே பார்க்கவில்லை. அதேபோல்நிரபராதிஎன தீர்ப்பு சொல்லப்பட்ட .ராசாவையும், கனிமொழியையும் பெரும்பான்மைத் தமிழர்கள் அப்படி நிரபராதிகளாக நம்பவில்லை.

tamilaruvi maniyan political comments against Rasa Kanimozhi and jayalalithaa

தி.மு.. நாளைக்கு ஆட்சிக்கு வந்துவிடுகிறது என்றே வைத்துக் கொள்ளுங்கள், ஸ்டாலினை சுற்றி நிற்கும் துரைமுருகன், பொன்முடி, ராசா, நேரு போன்றவர்களெல்லாம் சேர்த்து வைத்திருக்கும் சொத்தின் மதிப்பை எடுத்துப் பாருங்கள். எப்படி இவ்வளவு சம்பாத்தியத்தை இவர்களால் சாதிக்க முடிந்தது? செய்த தொழில்கள் என்ன? எதன் மூலம் இவ்வளவு கோடிகளைக் குவித்தார்கள்? ஸ்டாலினே ஓர் இளவரசர் போலத்தானே வலம் வருகிறார்.

tamilaruvi maniyan political comments against Rasa Kanimozhi and jayalalithaa

ஆக எப்படியெப்படியோ சம்பாதித்திருக்கும் தி.மு.. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஊழலற்ற ஆட்சியை தந்துவிடுமா என்ன?” என்று தெறிக்க விட்டிருக்கிறார் தமிழருவி.

யோசிக்க வேண்டிய விஷயம்தான்.

Follow Us:
Download App:
  • android
  • ios