Asianet News TamilAsianet News Tamil

ஹெச்.ராஜாவை பி.ஆர்.ஓ-வாக நியமித்து தமிழன் பிரசன்னா எகத்தாளம்... வாரி கட்டிக்கொண்டு வந்த சு.ப.வீ..!

ஹெச்.ராஜாவை தனதுபி.ஆர்.ஓவாக நியமித்து பிரசன்னா பதிலடி கொடுத்ததை சு.ப.வீரபாண்டியன் சுட்டிக்காட்டி ஆதரவு தெரிவித்துள்ளார்.

Tamilan Prasanna appointed H. Raja as PRO
Author
Tamil, First Published May 15, 2020, 11:21 AM IST

ஹெச்.ராஜாவை தனதுபி.ஆர்.ஓவாக நியமித்து பிரசன்னா பதிலடி கொடுத்ததை சு.ப.வீரபாண்டியன் சுட்டிக்காட்டி ஆதரவு தெரிவித்துள்ளார்.

பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கடந்த 13ம் தேதி திமுக ஊடக பேச்சாளர் தமிழன் பிரசன்னாவின் தொலைபேசி எண்ணை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு, சர்ச்சையை ஏற்படுத்தினார். “யாரோ தமிழன் பிரசன்னாவாம். மாண்புமிகு பிரதமர் அவர்களை அடிக்கடி இழிவாக பேசும் பழக்கம் உள்ள நபர் என்று கேள்வி. 9566111414 அவரது நம்பர் என்கிறார்கள்”என்று பதிவிட்டு இருந்தார்.

 Tamilan Prasanna appointed H. Raja as PRO

அதற்கு பதிலடி கொடுத்த பிரசன்னா, “எனக்குப் புதிதாக வேலை செய்ய பாஜக-வின் தேசியச் செயலாளர் என்று சொல்லிக் கொள்ளும் திரு.எச்.ராஜா அவர்களை புதிய PROவாக நியமித்து இருக்கின்றேன். அதனால் மக்கள் என்னிடத்தில் பேச அவர் எனது தொலைப்பேசி எண்ணை அவரின் முநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.Tamilan Prasanna appointed H. Raja as PRO

பாஜகவில் இருக்கும் எனது தீவிர ரசிகர்கள் தொடர்ந்து எனது தொலைப்பேசிக்கு அழைப்பு விடுக்கின்றனர். ‘ஒன்றிணைவோம் வா'  நிகழ்ச்சியில் நான் மக்கள் பணியாற்றுவதால் எனக்கு வரும் அழைப்புகளை என்னுடைய புதிய PRO எச்.ராஜா அவர்கள் எடுத்துப் பேசுவார். அதக்றாக எனது அழைப்புகளை நான் அவரின் எண்ணுக்கு ‘Call Forward'செய்துள்ளேன். நன்றாக அழைத்துப் பேசுங்கள். நிறைய அழைப்பு கொடுக்குமாறு நான் பாஜக, ஆர்எஸ்எஸ் சங்கிகளை கேட்டுக் கொள்கின்றேன்,” என பதிலடி கொடுத்து இருந்தார்.  

Tamilan Prasanna appointed H. Raja as PRO
இந்நிலையில் தமிழன் பிரசன்னாவுக்கு ஆதரவாக திராவிடர் விடுதலை கழக தலைவர் சு.ப.வீரபாண்டியன் தனது ட்விட்டர் பக்கத்தில்  “தன்வினை தன்னைச் சுடும்,” என்று கருத்திட்டு எச்.ராஜாவை மேலும் கிண்டலடித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios