அம்மா ஆசையை அம்மாவாசை அன்றே  நிறைவேற்றியிருக்கிறார்கள் 

தமிழக அரசியலில் ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய  இந்நாளில்  அதிமுகவின்  இரண்டு அணிகளும் நீண்ட  இழுபறிக்குபின்  ஒன்று சேர்ந்தனர். இன்றே துணை முதல்வராக ஓபிஎஸ் உம்,   தமிழ்  வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை  அமைச்சராக  மாபா பாண்டியராஜனும் பதவி  ஏற்றனர். இவர்கள் இருவருக்கும்  தமிழக  பொருப்பாளுனர் வித்யா சாகர் ராவ், பதவி  பிரமாணம் செய்து வைத்து , பூங்கொத்து கொடுத்து வாழ்த்து  தெரிவித்தார்.

 

அம்மா ஆசையை அமாவாசை அன்று நிறைவேற்றியிருக்கிறார்கள்.....

— Tamilisai Soundrajan (@drtamilisaibjp) August 21, 2017

 

அம்மா ஆசையை அம்மவாசை அன்றே  நிறைவேற்றியிருக்கிறார்கள்

இது குறித்து கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்  தனது  ட்விட்டர் பக்கத்தில் , அம்மா ஆசையை அம்மவாசை அன்றே  நிறைவேற்றியிருக்கிறார்கள்  என டைமிங்கில் ரைமிங்காக பதிவிட்டுள்ளார்.

இதிலிருந்து தமிழக அரசியலில் நிலவி வந்த குழப்பங்களுக்கு இன்று முடிவு கிடைத்து விட்டதாக, வெவ்வேறு அரசியல்  கட்சியினரின் வெளிப்படுத்தும் வரவேற்பையும் எதிர்ப்பையும்  தெரிந்துக்கொள்ள முடிகிறது