பிரதமர் மோடிக்காக தூக்கு கயிற்றை தயாராக வைத்துள்ளதாக திமுக செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னா பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் அவர் கைது செய்யப்படுவாரா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

திமுக செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னா தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் பெரும்பான்மை சமூக மக்களின் வழிபாடு, இறைநம்பிக்கைகளை பற்றி இழிவாகப் பேசி சர்ச்சையில் சிக்குவது வழக்கம். தமிழன் பிரசன்ன மீது பிரதமரை அவமரியாதையாக பேசியதாக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருந்தும் அவர் தனது போக்கை மாற்றிக் கொள்வதாக இல்லை.

இதுகுறித்து பாஜக பிரமுகர் ஒருவர், ‘’வழக்கு பதிவு செய்த சிறிது நாட்கள் அமைதியாக இருப்பார். வழக்கம்போல் தனது அநாகரிகமான பிரச்சாரத்தை தொடங்குவார். இந்நிலையில் தமிழன் பிரசன்னா பேசி வெளியிட்டுள்ள வீடியோவில், ‘’நாங்கள் அனைவரும் துக்கத்துடன் காத்திருக்கிறோம். மோடி அவர்களே உங்கள் கழுத்தை எப்போது தூக்கு கயிற்றில் மாட்டும்.  தோல்வி அடைந்து திட்டத்தை அரசாங்கத்தை திசை திருப்புவதற்காக மக்களை முட்டாளாக்குகிறீர்கள். 

மக்கள் கொடுத்த அதிகாரத்தை பயன்படுத்தி எங்களை பலிகடா ஆக்கி உள்ளீர்கள் மோடி. பாஜக அரசும், ஒட்டுமொத்த அமைச்சரவையும் இதற்கு பதில் சொல்லும் நேரமும் காலமும் நிச்சயம் விரைவில். அனைத்து குடிமகன்கள் தூக்கு கயிற்றுடன் காத்திருக்கின்றனர். வாருங்கள் எங்கள் கண்முன்னே நீங்கள் தூக்கில் தொங்குவதை பார்த்து கண்டு களிக்க இருக்கிறோம்’’என தமிழன் பிரசன்னா பேசியுள்ளார்.  இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இது பாஜகவின் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

தமிழக பாஜக, பிரசன்னா பேசிய தேசிய சட்ட விரோத பேச்சுக்கள் அனைத்தையும் சேகரித்து ஆய்வுக்கு உத்தரவிட்டிருக்கிறது. இது அனைத்தையும் மொழிபெயர்த்து உள்துறை அமைச்சருக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது’’எனத் தெரிவித்தார். இம்முறை தமிழன் பிரசன்னா கைது செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பிரதமர் தொடர்பாக  பேசிய வீடியோ பழைய வீடியோ எனக் கூறப்படுகிறது. இருந்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் தற்போது நடவடிக்கை எடுக்க அனைத்து ஏற்பாடுகளும் தமிழக பாஜக சார்பில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.