இறப்பை வைத்து இயக்கத்தை பலவீனப்படுத்தி, சில கரும்புள்ளிகளின் துணையோடு குளிர் காய்ந்தனர். நாய் குரைக்கிறது என்பதற்காக நாமும் நாயை பார்த்து குரைத்திட ‌முடியாது.


திமுகவின் செய்தி தொடர்பு பிரிவின் இணைச் செயலாளராகவும் டிவி விவாதங்களில் திமுக சார்பில் பேசுபவருமான தமிழன் பிரசன்னாவின் மனைவி வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை எருக்கஞ்சேரியில் தனது மனைவி நதியா மற்றும் மூன்று குழந்தைகளுடன் தமிழன் பிரசன்னா வசித்து வந்துள்ளார். இரண்டு தளங்கள் கொண்ட இந்த வீட்டின் கீழ் தளத்தில் தமிழன் பிரசன்னாவின் மாமனார் – மாமியார் வசித்து வருகின்றனர். தமிழன் பிரசன்னா தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மேல் தளத்தில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் காலை ஆறரை மணி அளவில் தமிழன் பிரசன்னா வீட்டில் இருந்து அலறல் சப்தம் கேட்டுள்ளது. இதனால் அக்கம் பக்கத்தினர் பதறி அடித்துக் கொண்டு சென்ற நிலையில் தமிழன் பிரசன்னா மனைவி நதியா தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார்.

மனைவி தூக்கில் தொங்கிய நேரத்தில் பிரசன்னா, தனது அறையில் அமர்ந்து செய்தித் தாள் வாசித்துக் கொண்டிருந்ததாக கூறுகிறார்கள். அதே போல் அவர்களின் மூன்று குழந்தைகளும் கீழே தனது தாத்தா பாட்டி வீட்டில் இருந்துள்ளனர். அக்கம் பக்கத்தினர் வந்து நதியாவின் சடலத்தை கீழே இறக்கி வைத்துள்ளனர். அப்போது நதியாவின் உடலில் உயிர் இல்லை. இதனை அடுத்து வழக்கறிஞரான தமிழன் பிரசன்னா உடனடியாக கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். போலீசார் வந்து நதியாவின் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் பிரசன்னாவையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

விசாரணையின் போது தனது மனைவிக்கு இன்று பிறந்த நாள் என்றும் பிறந்த நாளை கொண்டா ட வேண்டும் என்று அவள் வலியுறுத்தியதாகவும் ஆனால் கொரோனாவை காரணம் காட்டி அதற்கு தான் மறுத்ததாகவும் அதன் பிறகு தனது மனைவியை தான் சடலமாகவே பார்த்ததாகவும் பிரசன்னா போலீசாரிடம் கூறியுள்ளார். இதே போல் பிரசன்னாவின் மாமனாரும் நதியாவின் தந்தையும் தனது மகள் பிறந்த நாளை கொண்டாட வேண்டும் என்று மருமகனுடன் சண்டையிட்டதாகவும் அதற்கு மருமகன் மறுத்ததால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனை அடுத்து போலீசார் தமிழன் பிரசன்னாவை விசாரணை முடிந்து அனுப்பி வைத்துள்ளனர். இதனிடையே பட்டப்பகலில் வீட்டின் ஹாலில் நதியா தற்கொலை செய்து கொண்ட போது கணவர் பிரசன்னா அறைக்குள் இருந்ததாக கூறுவது பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாக சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. பிறந்த நாள் கொண்டாடவில்லை என்பதற்காக மூன்று குழந்தைகளின் தாயார் தற்கொலை செய்து கொள்வாரா என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். திமுகவினருக்கு கூட பிரசன்னா மீது சந்தேகம் எழுந்துள்ளது. சமூக வலைதளங்களில் பிரசன்னா மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஆனால் திமுக இளைஞரணி செயலாளர் நதியா உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்றபோது, தமிழன் பிரசன்னா கதறி கதறி அழுதது கட்சி பேதமின்றி அனைவரையும் இளக வைத்துள்ளது.

இதுகுறித்து அதிமுகவை சேர்ந்தவர்கள், ‘’தமிழன் பிரசன்னா மனைவி, ஆ.ராசா மனைவி.. என யாராக இருந்தாலும் இறப்பில் அரசியல் செய்யக்கூடாது என்பது எனது தாழ்மையான கருத்து. இறப்பு என்பது எல்லோருக்குமானது; அது யாரையும் விட்டு வைக்கப்போவதில்லை. மறைந்த முதலமைச்சர் அம்மா அவர்கள் மருத்துவமனையில் இருந்த போதும், இறந்த பிறகும் திமுகவில் சிலர் தவறான அரசியல் செய்தார்கள் என்பது உண்மையே.. ஏனெனில் அவர்களுக்கு அன்றைய சூழலில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் சிறப்பான ஆட்சி நிர்வாகம், மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாக கொண்ட அரசு, தொடர் வெற்றி என்று அஇஅதிமுக வை எதிர்கொள்ள‌ வேறு ஆயுதமின்றி, இறப்பை வைத்து இயக்கத்தை பலவீனப்படுத்தி, சில கரும்புள்ளிகளின் துணையோடு குளிர் காய்ந்தனர். நாய் குரைக்கிறது என்பதற்காக நாமும் நாயை பார்த்து குரைத்திட ‌முடியாது. இறக்கத்தான் பிறந்தோம்! அதுவரை இரக்கத்தோடு இருப்போம்!! வான்புகழ் வள்ளுவரின் வழியில்... இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்’’ எனக் கூறி வருகின்றனர்.

ஜெயலலிதா இறப்பின்போது கடுமையாக விமர்சித்தவர் இந்த தமிழன் பிரசன்னா..!