தமிழகத்தில் இருந்து வெற்றி பெற்ற திமுக எம்.பிக்கள் மனு மட்டுமே கொடுத்து வருகிறார்கள். பாஜகவுக்கு ஓட்டுப்போடாததால் தமிழகத்திற்கு இழப்பு எனத் தமிழிசை தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. 

தமிழக பாஜக தலைவர் தமிழிசை தனது ட்விட்டர் பக்கத்தில், ’கார்த்தி.சிதம்பரம்-பியூஷ்கோயலிடம் கோரிக்கை மனு. கலாநிதி வீராசாமி- ராஜ்நாத் சிங்கிடம் மனு. டிஆர்பாலு ரயில்வே மேலாளரிடம் மனு! தயாநிதி தென்னக ரயில் ஆபிசில் மனு! அமேதியில் அமைச்சர் ஸ்மிதிராணி ஒரே மாதத்தில் பலகோடி மதிப்பில் திட்டங்களை துவக்கி அசத்தல். பாஜகவை தோற்கடித்த தமிழகம்..? இழப்பு???’’ எனத் தெரிவித்து இருந்தார். 

தமிழகத்தில் ஓட்டுப்போடாததால் மனு மட்டுமே தமிழக எம்.பிகள் கொடுத்து வருகின்றனர். அமேதியில் வெற்றி பெற்றதால் அந்தத் தொகுதிக்கு பாஜக எம்.பி பலகோடி பதிப்பிலான திட்டங்களை துவக்கி வைத்து வருகிறார். ஆகையால் பாஜகவுக்கு ஓட்டுப்போடாததால் தமிழகத்திற்கு இழப்பு என்கிற அர்த்தத்தில் அமைத்திருக்கிறது தமிழிசையின் கருத்து. இதற்கு எதிராக பலரும் கடுமையாக கண்டித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அதில் தமிழக எம்.பி.க்கள் கொடுக்கும் மனுக்கள் குப்பைக்கு தான் போகும்,,, ஏதும்.. செய்ய மாட்டார்கள்... அப்படி தானே அக்கா... என்ன இழப்பு? கார்த்தியும், தயாநிதியும், பாலுவும் கோரிக்கை வைக்கிறது தமிழக மக்களுக்காகத் தானே? அதை அந்த அமைச்சர்கள் செய்ய மாட்டாங்களா? உங்கள ஜெயிக்க வச்சா தான் செய்வாங்கன்னு சொல்றிங்களா? துணிச்சல் இருந்தா முடியாதுன்னு சொல்லித் தான் பாருங்களேன்.

 

 

என்ன இழப்பு? கார்த்தியும், தயாநிதியும், பாலுவும் கோரிக்கை வைக்கிறது தமிழக மக்களுக்காகத் தானே? அதை அந்த அமைச்சர்கள் செய்ய மாட்டாங்களா? உங்கள ஜெயிக்க வச்சா தான் செய்வாங்கன்னு சொல்றிங்களா? துணிச்சல் இருந்தா முடியாதுன்னு சொல்லித் தான் பாருங்களேன்.

நீங்கள் மத்திய மந்திரி ஆகமுடியவில்லை என்ற வருத்தமா? மத்திய பாஜக தமிழகத்தை வெளிப்படையாகவே வஞ்சிக்கிறது என்று அழகாக சொல்லிவிட்டீர்கள். சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களையும் தமிழக MP க்களின் கோரிக்கைகளையும் நீங்கள் குப்பை தொட்டிக்கித்தானே அனுப்புகிறீர்கள்.

 

தமிழக M P க்கள் கொடுத்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அமைச்சர்களை நீங்கள் வற்புறுத்த வேண்டும். பிறகு அந்த கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டும் மக்கள் உங்கள் மீது கோபத்தில் இருக்கிறார்கள். அதை விட்டுவிட்டு தமிழ் நாட்டு மக்கள் மீது கோபம் கொள்ள கூடாது’’ என பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.