tamil nadu students to write NEET in other state

மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வான் நீட் நாளை இந்தியா முழுவதும் நடைபெற் உள்ளது. இந்நிலையில் தமிழக மாணவர்களுக்கு தேர்வு எழுதுவதற்கான தேர்வு மையங்கள் யாவும் வெளி மாநிலங்களில் போடப்பட்டுள்ளது.

இதை எதிர்த்து மதுரை உச்ச நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது வெளிமாநிலத்தில் போடப்பட்ட மாணவர்களூக்கு தமிழகத்திலே தேர்வு மையம் போடவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தமிழக மாணவர்களுக்கு தமிழகத்தில்தான் போடவேண்டுமென தீர்ப்பு வந்த்து இந்த தீர்ப்பை எதிர்த்து சிபிஎஸ்இ டெல்லி உச்சநீதிமன்றத்தில் மனு போட்டது, அதன்படி நேற்று வந்த தீர்ப்பில் எங்கு தேர்வு மையம் போடப்பட்டதோ அங்குதான் அவர்கள் எழுதவேண்டுமென தீர்ப்பானது இதனால் மாணவர்கள் யாவரும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

ராஜஸ்தான், சிக்கிம் போன்ற இடங்களில் தேர்வு மையம் 5000அதிகமான மாணவர்களுக்கு போடப்பட்டுள்ளன. . ராஜஸ்தான் மாநிலத்தில் புழுதி புயல் வீசி வருவதால் மாணவர்களின் பாதுகாப்பு மேலும் கவலைக்கிடமாக உள்ளது.

தமிழக அரசு மாணவர்களுக்கு ரூபாய் 1000 உதவித்தொகையை அறிவித்துள்ளது. இது மாணவர்களுக்கும் அவர்களுக்கு உதவியாக உடன்செல்லும் பெற்றோர்களுக்கும் போதுமானதாக இருக்காது என கல்வியாளர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கேரளாவில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பேருந்தும், பல இடங்களில் உதவி மையங்களும் அங்குள்ள ஆட்சியாளர்கள் மூலம் அமைக்கவேண்டுமென முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் பல ஏழை எளிய மாணவர்கள் வேறு மாநிலங்களுக்கு செல்ல முடியாமல் நுழைவுத்தேர்வை எழுதமுடியாமல் தவித்து வருகின்றனர்.