பிலிப்பைன்சில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை செயலாளரிடம் மஜக பொதுச் செயலாளர் தமிமுன்அன்சாரி MLA வேண்டுகோள் விடுத்துள்ளார். மருத்துவப் படிப்புக்காக பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு சென்ற தமிழக மாணவர்கள் தலைநகர் மணிலா விமான நிலையத்தில் விமான சேவை கிடைக்காமல் தாயகம் திரும்ப வழியின்றி தவிக்கும் செய்திகள் வலைதளங்களில் வெளியாகி உள்ள நிலையில் அன்சாரி இதை வலியுறுத்தியுள்ளார். 

 

குறிப்பாக கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டது முதல் உலக நாடுகள் முற்றிலுமாக விமான போக்குவரத்திற்கு தடைவிதித்துள்ளன. இதன் காரணமாக  வெளிநாடுகளில் கல்வி மற்றும் பணி நிமித்தமாக சென்ற பயணிகள் ஆங்காங்கே முடங்கும் நிலை உருவானது. இந்நிலையில் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் வெளிநாடுகளில் சிக்கியுள்ள குடிமக்களை மத்திய அரசு தாயகம் அழைத்து வரும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மருத்துவப் படிப்புக்காக பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு சென்ற தமிழக மாணவர்கள் தலைநகர் மணிலா விமான நிலையத்தில் விமான சேவை கிடைக்காமல் தாயகம் திரும்ப வழியின்றி தவிக்கும் செய்திகள் வலைதளங்களில் வருகிறது.

 

இது குறித்து புதன் கிழமை மதியம் தலைமைச் செயலாளர் திரு.சண்முகம் அவர்களை மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி MLA அவர்கள் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இது குறித்து இந்திய வெளியுறவு துறை மூலம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு அவர்களை மீட்க உதவுமாறு கேட்டுக்கொண்டார். உடனே இது குறித்து விசாரித்து உரிய முயற்சிகள் எடுப்பதாக தலைமை செயலாளர் அவர்கள் உறுதியளித்துள்ளார். என மாஜக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.