தமிழகத்தில் மருத்துவ உபகரணங்கள் தேவையான அளவில் கையிருப்பில் உள்ளன என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாவட்ட ஆட்சியாளர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். அப்போது கொரோனா தடுப்பில் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து பேசினார். அப்போது  முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:  கொரோனா பரவலை தடுக்க பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. கொரோனா பரிசோதனையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் இதுவரை 24.7 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனாவை தடுக்க, சித்த மருந்தான கபசுர குடிநீர் மக்களுக்கு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் இருந்து 4 லட்சத்திற்கும் அதிகமான பிற மாநில தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், பேசிய முதல்வர் வீடு வீடாக சென்று பரிசோதனை நடத்தப்படுகிறது. கொரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. நாளொன்றுக்கு 63 ஆயிரம் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. மருத்துவ உபகரணங்கள் தேவையான அளவில் கையிருப்பில் உள்ளன. பிளாஸ்மா சிகிச்சையின் மூலம் குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 5ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் விலையில்லா முகக் கவசங்கள் வழங்கப்படும். இதுவரை சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த 46 லட்சம் முகக்கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

இந்தியாவிலேயே கொரோனா காலத்திலும் அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலம் தமிழகம்தான் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். பிளாஸ்மா சிகிச்சையின் மூலம் குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 5ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் விலையில்லா முகக் கவசங்கள் வழங்கப்படும். கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மக்களுக்கு எதிர்ப்பு சக்தி மருந்துகள் வழங்கப்படுகின்றன. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்துள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.