தமிழகத்தில் காலியாக உள்ள கவர்னர் பதவிக்கு பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸின் மாமனார் கிருஷ்ணம் ராஜு நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


தமிழகத்தின் ஆளுனராக இருந்த ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் ரோசய்யா தனது பதவி காலமான ஐந்தாண்டை முழுமையாக  பூர்த்தி செய்தார். அவரை தொடர்ந்து , அதே ஆந்திராவை சேர்ந்த முன்னாள் உள்துறை இணை அமைச்சரும்  மஹாராஷ்டிர மாநில கவர்னருமான வித்யாசாகர் ராவ் பொறுப்பு ஆளுனராக நியமிக்கப்பட்டார். 


இந்த நிலையில் கர்நாடக மாநில மூத்த ஆர்.எஸ்.எஸ் பிரமுகரான சங்கரமூர்த்தி நியமிக்கப்படுவார் என்று தொடர்ந்து தகவல்கள் பரவி வந்தன. ஆனால் ரோசய்யா , வித்யாசாகர் ராவ் போன்ற ஆந்திர மாநிலத்தவரை  தொடர்ந்து மீண்டும் ஒரு ஆந்திர மாநில பிரமுகரே தமிழக கவர்னராக நியமிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. 


பிரபல நடிகரும் பாகுபலி படத்தில் சக்கைப்போடு போட்ட சூப்பர் நடிகருமான பிரபாஸின் மாமனார் கிருஷ்ணம் ராஜு கவர்னராக வருவது உறுதியாகி உள்ளது.

இவர் முன்னாள் மத்திய இணை அமைச்சராக இருந்தவர். ஆரம்பம் முதல் பாஜகவின் தீவிர கட்சி பிரமுகர். தெலுங்கானாவின் பண்டாரு தத்தாத்ரேயாவுக்கு இணையான புகழ் பெற்றவர்.

இவர் கவர்னராக நியமிக்கப்படும் அறிவிப்பு விரைவில்  வரும் என டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.