உதயநிதியின் ஆபாசப் பேச்சுக்கு தமிழகம் முழுவதும் கடுமையான கண்டனம் எழுந்துவருகிறது. டி.டி.வி.தினகரன் தொடங்கி வானதி சீனிவாசன், குஷ்பு, ஜெயானந்த் உள்ளிட்ட பலரும் உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி வருகின்றனர்.
உதயநிதியின் ஆபாசப் பேச்சுக்கு தமிழகம் முழுவதும் கடுமையான கண்டனம் எழுந்துவருகிறது. டி.டி.வி.தினகரன் தொடங்கி வானதி சீனிவாசன், குஷ்பு, ஜெயானந்த் உள்ளிட்ட பலரும் உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி வருகின்றனர்.
இந்த நிலையில் உதயநிதியின் செயலுக்கு அவரது தந்தை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரியிருக்கிறார் தமிழ்நாடு முஸ்லீம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா, ‘’இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சமீபகாலமாக பிரச்சாரம் செய்துவரும் உதயநிதி, முதல்வர் பழனிசாமியை விமர்சனம் என்கிற பெயரில் சின்னம்மா (சசிகலா) காலில் விழுந்து பதவி பெற்றதைப் பற்றி பேசி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், இதே தோனியில் முதல்வர் பழனிசாமி சின்னம்மா (சசிகலா) காலில் விழுந்து பதவி பெற்றார் என்று அநாகரீகமாக பேசியுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் இந்த பேச்சு, பெண்கள் மத்தியில் கடும் கோபத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. உதயநிதி ஸ்டாலின் அரசியல் கத்து குட்டி என்பதை இந்த சம்பவம் மூலம் நிரூபித்தி காட்டிவிட்டார். பெண்களுக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை இதுதானா பொதுமக்கள் உதயநிதி ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர். எவ்வளவு அருவருப்பான வார்த்தை அது. உதயநிதி சொன்னது நகைச்சுவை அல்ல. பெண்களைப் பற்றி இரட்டை அர்த்தத்தில் தெளிவாகக் கூறிய மோசமான வார்த்தைகள் அவை. வெறுப்பு அரசியலை விட்டுவிட்டு ஆக்கப்பூர்வமாக திமுகவால் எதையாவது பேச முடியாது என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகின்றனர்.
ஓசி பிரியாணிக்காக கடை ஊழியர்களை தாக்குவது, இலவசமாக டீ தரவில்லை என டீக்கடைகாரர்களை அடிப்பது, ப்யூட்டி பார்லரில் பெண்ணை தாக்குவது என தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தும் செயலில் ஈடுபட்டு வரும் திமுகவினர் மீது பொதுமக்கள் ஏற்கனவே எரிச்சலில் உள்ளனர்.இந்நிலையில் பெண்களை கண்ணியத்துடனும், மதிப்புடனும் நடத்தி வரும் தமிழகத்தில், இப்படி அரசியல் பொதுமேடையில் அநாகரீகமற்ற முறையில் பேசும் உதயநிதி செயலை அவரது தந்தை ஸ்டாலின் அவர்கள் கண்டிக்க வேண்டும். அதுமட்டுமின்றி உதயநிதியின் பேச்சுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்பதோடு, உதயநிதி தனது கருத்தை திரும்ப பெற வேண்டும்.
இல்லையென்றால் தமிழக மக்கள் உங்களை ஒட்டுமொத்த புறக்கணிக்கும் நிலைக்கு தள்ளப்படுவீர்கள் என்பதோடு, கடுமை விளைவுகளை சந்திக்க நேரிடும்’’என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 8, 2021, 5:49 PM IST