138 நகராட்சிகளில் 115 நகராட்சிகளில் திமுகவே முன்னிலையில் உள்ளது. அதிமுக 10 வெறும் நகராட்சிகளிலும் முன்னிலையில் உள்ளது. அதேபோல் 489 பேரூராட்சிகளில் 288 பேரூராட்சிகளில் திமுகவும், வெறும் 19 பேரூராட்சிகளில் அதிமுகவும், 5 பேரூராட்சிகளில் பாஜகவும், 2 பேரூராட்சிகளில் பாமகவும், 2 பேரூராட்சிகளில் அமமுகவும் முன்னிலை பெற்றுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என அனைத்து இடங்களிலும் திமுக முன்னிலை பெற்று வரும் நிலையில் மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளிலும் திமுகவே முன்னிலையில் உள்ளது. அதில் ஒரு இடத்தில் கூட அதிமுக முன்னிலையில் இல்லை, அனைத்து மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றும் என ஏற்கனவே திமுக தலைவர் ஸ்டாலின் கூறி வந்த நிலையில் அது தற்போது நிரூபணமாகியுள்ளது.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் மொத்தம் 12601 வார்டு கவுன்சிலர் பதவி இடங்களுக்கு பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் 268 மையங்களில் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன, பின்னர் வேட்பாளர்கள் முகவர்கள் முன்னிலையில் வார்டு வாரியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சீல் அகற்றப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது . வழக்கம்போல சென்னை திமுகவுக்கு தான் என்பது ஓரளவுக்கு உறுதியாகி விட்டது, அதேபோல் அதிமுக மற்றும் பாஜகவின் கோட்டையாக உள்ள கொங்கு மண்டலத்தில் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அங்கும் திமுகவே ஆதிக்கம் செலுத்தி வருவதை காணமுடிகிறது.

காலை 11 மணி நிலவரப்படி மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளில் 21 மாநகராட்சிகளில் திமுக முன்னிலை பெற்றுள்ளது. அதிமுக, பாஜக, பாமக ஒரு மாநகராட்சியில் கூட இல்லை இதனால் அனைத்து மாநகராட்சிகளையும் திமுகவே கைப்பற்றுமா.? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 138 நகராட்சிகளில் 115 நகராட்சிகளில் திமுகவே முன்னிலையில் உள்ளது.

அதிமுக 10 வெறும் நகராட்சிகளிலும் முன்னிலையில் உள்ளது. அதேபோல் 489 பேரூராட்சிகளில் 288 பேரூராட்சிகளில் திமுகவும், வெறும் 19 பேரூராட்சிகளில் அதிமுகவும், 5 பேரூராட்சிகளில் பாஜகவும், 2 பேரூராட்சிகளில் பாமகவும், 2 பேரூராட்சிகளில் அமமுகவும் முன்னிலை பெற்றுள்ளது. மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளில் 21 இடங்களிலும் திமுக முன்னிலை பெற்றுள்ளதால் திமுக தொண்டர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். கோவை, நாகர்கோவில் ஆகிய மாநகராட்சிகளையாகவது பாஜக கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அந்த இடத்திலும் அக்காட்சிக்கு வாய்ப்பு இல்லாத சூழ்நிலையே நிலவுகிறது. இதனால் அதிமுக மற்றும் பாஜக தொண்டர்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர்.
