தமிழகத்திற்கு தேசிய அளவில் ஆட்டோமொபைல் ஆடை மற்றும் மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில்  தேசிய அளவில் மூன்றாவது இடம் கிடைத்திருப்பதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு தொடர்ந்து மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதே சமயம் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி பெருக்கவும் அதிமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த கொரானா பேரிடர் காலத்திலும் ரூபாய் 3500 கோடி முதலீட்டை ஈர்த்துள்ளது. இந்த நிலையில் தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேசிய அளவில் தமிழகம் 46% ஆட்டோமொபைல் ஏற்றுமதி, 19% ஆடை மற்றும் இன்னும் பொருட்கள் ஏற்றுமதியுடன் தமிழகம் தேசிய அளவில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருப்பதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.

 

ஏற்றுமதி தயாரிப்பு குறியீட்டு 2020-ல் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. அரசாங்க கொள்கை, வர்த்தகத்திற்கு உகந்த காலநிலை, ஏற்றுமதி சூழல் மற்றும் ஏற்றுமதி நிலை உள்ளிட்ட நான்கு அம்சங்களையும் தமிழகம் அடிப்படையாகக் கொண்டு கொண்டுள்ளது என்றும் முதல்வர் கூறினார். இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 70% மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, தமிழ்நாடு உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் தான் நடைபெறுகிறது. 

தமிழகத்தின் ஏற்றுமதி அதிகரிப்பால் நாட்டின் பொருளாதாரமும் உயர ஒரு காரணமாக அமைந்துள்ளது. தமிழகத்தில் ஏற்றுமதி அதிகரித்திருக்கிறது என்றால் தமிழ்நாட்டில் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. இதன் மூலம் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.