Asianet News TamilAsianet News Tamil

இந்த விஷயத்துல இந்தியாவிலேயே நம்ம தான் டாப்பு.. நம்மள அடிச்சுக்க ஆளே இல்லை.. மார்த்தட்டும் அமைச்சர் மா.சு.!

தடுப்பூசி செலுத்துவதில் ஒருவரை கூட தவறவிட்டுவிட கூடாது என முதலமைச்சர் அறிவுறுத்தியதின் பேரில் வீடு தேடி தடுப்பூசி செலுத்தும் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 65 லட்சம் பேர் இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். 

Tamil Nadu is the only state in India to have vaccinated more mothers.. Minister ma.subramanian
Author
Chennai, First Published Nov 6, 2021, 12:44 PM IST

 தமிழ்நாட்டில் இதுவரை 450 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

வீடு தேடி தடுப்பூசி திட்டத்தின் கீழ் பட்டினப்பாக்கம் குடிசைமாற்று வாரிய குடியிருப்புகளில் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணியினை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டனர். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்;- தடுப்பூசி செலுத்துவதில் ஒருவரை கூட தவறவிட்டுவிட கூடாது என முதலமைச்சர் அறிவுறுத்தியதின் பேரில் வீடு தேடி தடுப்பூசி செலுத்தும் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 65 லட்சம் பேர் இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். இதுவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளவர்களை கண்டறியப்பட்டு  வீடு தேடி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசி செலுத்தப்படும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க;- அதிமுக சுக்குநூறாய் தகர்ந்துவிடும்... எடப்பாடி -சசிகலாவுக்கு ஜெ. உதவியாளர் எச்சரிக்கை..!

Tamil Nadu is the only state in India to have vaccinated more mothers.. Minister ma.subramanian

10க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா தொற்று 30 ஆயிரத்தை கடந்து அதிகரித்து வருகிறது. உலகம் முழுவது பெரிய அளவிலான அச்சுறுத்தல் தொடங்கியுள்ள சூழலில் தடுப்பூசி செலுத்திக்கொள்வது முக்கியம் என வலியுறுத்தியுள்ளார். நவம்பர் 14ம் தேதி தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரம் முகாம்களில் 8-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் இதுவரை நடந்து முடிந்த 7 மெகா தடுப்பூசி முகாம்களும் வெற்றி பெற்றுள்ளன. நவம்பர் மாதத்திற்குள் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும். 

இதையும் படிங்க;- ஆடிட்டர் குருமூர்த்தி மீதான புகார்.. ஆறப்போட்ட அதிமுக.. அதிரடி காட்டிய திமுக..!

Tamil Nadu is the only state in India to have vaccinated more mothers.. Minister ma.subramanian

மேலும், இந்தியாவிலேயே தாய்மார்களுக்கு அதிக தடுப்பூசி செலுத்திய மாநிலம் தமிழ்நாடுதான். வாக்காளர் பெயர் பட்டியலில் தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும். தொழில்நுட்ப கோளாறு காரணமாக தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு வழங்கும் சான்றிதழில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. விரைவில் சரி செய்யப்படும். தவறு நடைபெற்றிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதையும் படிங்க;- 10ம் வகுப்பு பையனை இழுத்துக்கொண்டு ஓடிய 35 வயது ஆண்டி.. ஒரு வழியாக 6 நாட்களுக்கு பிறகு கைது..!

மருத்துவ கலந்தாய்வில் வன்னியர் உள்ஒதுக்கீடு பின்பற்றப்படுவது குறித்து அரசு தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களுக்கு பின்னர் இதுகுறித்து முடிவெடுத்து மருத்துவ கல்லூரி சேர்க்கை கலந்தாய்வு தொடங்கப்படும். நவம்பர் இறுதிக்குள் 100% தடுப்பூசி செலுத்தி முடிக்கப்படும் என்ற இலக்கில் செயல்பட்டு வருகிறோம்.

Tamil Nadu is the only state in India to have vaccinated more mothers.. Minister ma.subramanian

குட்கா பான் விற்பனை செய்த 10க்கும் மேற்பட்டவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.  பான் குட்கா விற்பனை நடைபெற்றால் பொதுமக்கள் தகவல் கொடுக்க வேண்டும், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவ கலந்தாய்வு குறித்து இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும். தமிழ்நாட்டில் இதுவரை 450 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios