தமிழகத்தில் டாஸ்மாக்கை ஒழிக்க பா.ஜ.க. ஆட்சிக்கு வரவேண்டும் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பா.ஜ.க மகளிர் மாநாட்டில் பேசியுள்ளார். பெண்கள் பாஸ்போர்ட் எடுக்கத் தந்தை அல்லது கணவர் பெயரைக் குறிப்பிட வேண்டும். தற்போது அது அவசியம் இல்லை. தந்தை இல்லாத, கணவர் இல்லாத பெண்கள் சிரமத்தைப் புரிந்துகொண்டு அந்த சிஸ்டத்தை பிரதமர் மோடி மாற்றியுள்ளார். 

பெண்களின் அசௌகரியத்தைப் போக்குவதற்காக 4 ஆண்டுகளில் 7 கோடி பேருக்கு தனி நபர் கழிவறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. பள்ளிகள் தோறும் கழிவறைகள். அதிலும் பெண்கள் பள்ளிக்கு முன்னுரிமை. பேறுகாலம் என்றால் மறுபிறப்பு. ஒவ்வொரு தந்தைக்கும் தனது மகள் பேறுகாலத்தின் போது அச்சம் ஏற்படுவது இயற்கை. நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் பேறுகாலத்திற்கு முன்னுரிமை கொடுக்க மோடி உத்தரவிட்டார்.