வென்டிலேட்டர்கள் குறித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு தவறானது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக இன்று மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பின்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர்:- விளம்பரத்திற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறைகூறி வருகிறார். தமிழகத்தில் 2,71 லட்சம் பிசிஆர் கருவிகள் 43 பரிசோதனை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 12.56 லட்சம் பிசிஆர் கருவிகள் வந்துள்ளன என  ஸ்டாலின் புகாருக்கு முதல்வர் பதிலளித்துள்ளார்.

 

விளம்பரத்திற்காக நாங்கள் பேசவில்லை, அரசு சரியான முறையில் செயல்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் 2741 பேர் வெண்டிலேட்டர்கள் உள்ளன.  வெண்டிலேட்டரில் 5 பேர் மட்டுமே தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். வெண்டிலேட்டர் பயன்படுத்தக்கூடியஅளவிற்கு கொரோனா தீவிரமாகவில்லை என்று கூறியுள்ளார். 

மேலும் பேசிய அவர் கொரோனாவை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் கொரோனா கட்டுக்குள் உள்ளது. இந்த 4 மாவட்டங்களில் தொற்று பரவலைத் தடுக்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தொற்றுப்பரவல் அதிகம் உள்ள மண்டலங்களில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மண்டல வாரியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

 கொரோனாவை தடுக்க அதிகளவில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து 56 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். இறப்பு விகிதம் 0.80 சதவீதமாக உள்ளது. இறப்பு விகிதம் குறைவாக இருப்பதால் கொரோனா குறித்து மக்கள் கொள்ள தேவையில்லை. தமிழகத்தில் 23,495 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 13,170 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று முதல்வர் கூறியுள்ளார்.