ஆரம்பிக்கலாங்களா.!! முதலில் முத்துராமலிங்க தேவர்.. அடுத்து இமானுவேல் சேகரன்! ஆளுநரின் திடீர் விசிட்

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவிக்கும், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நடைபெற்று வருகிறது.

Tamil Nadu Governor RN Ravi South District tour plan

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி வரும் 18 ஆம் தேதி (நாளை) 2 நாள் பயணமாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சென்று பல்வேறு நிழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காக கவர்னர் 18 ஆம் தேதி காலை 5 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை செல்கிறார். 

அங்கிருந்து கார் மூலம் ராமநாதபுரம் மாவட்டம் சென்றடையும் அவர் ராமேசுவரம் கேந்திர வித்யாலயா பள்ளியில் மாணவர்கள் - ஆசிரியர்களுடன் கலந்துரையாடுகிறார். அன்று மாலை தேவிப்பட்டினத்தில் மீனவர்களை சந்தித்து உரையாடுகிறார். எட்டிவயல் விவசாயிகளை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிகிறார்.

Tamil Nadu Governor RN Ravi South District tour plan

அடுத்த நாளான 19 ஆம் தேதி (புதன்கிழமை) உத்தரகோசமங்கை மங்கள நாத சுவாமி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்கிறார். மாலையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கும், பரமக்குடி தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்துக்கும் சென்று அஞ்சலி செலுத்துகிறார். அதன் பிறகு மதுரை வந்து விமானம் மூலம் சென்னை வந்தடைகிறார். 

இதையும் படிங்க..2 கோடி முக்கியம் பிகிலு.. 2024 தேர்தலுக்கு மு.க ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்! அதிமுக - பாஜகவுக்கு புது ஆப்பு

Tamil Nadu Governor RN Ravi South District tour plan

ஆளுநர் வருகையை யொட்டி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் ஆளுநர் ஆர். என். ரவி செல்லும் இடங்களில் எவ்வாறு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. ஆளுநர் ஆர்.என் ரவியின் ராமநாதபுர சுற்று பயணம் முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க..போன் வாங்க போறீங்களா? 2023ல் வெளிவரும் டாப் 5 மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன்ஸ் லிஸ்ட் இதோ

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios