தமிழக அரசின் கடன் சுமை ரூ.5.7 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இடைக்கால பட்ஜெட்டில் தகவல் தெரிவித்துள்ளார்.

கடந்த 2011-ம் ஆண்டில் ஜெயலலிதா தலைமையில் அதிமுக அரசு பொறுப்பேற்றபோது ஒரு லட்சம் கோடியாக இருந்த தமிழக அரசின் கடன் 4 லட்சத்து 56 ஆயிரத்து 660 கோடியாக அதிகரித்துள்ளதாக கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், சென்னை கலைவாணர் அரங்கில் கூடிய சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அப்போது, பேசிய அவர் கொரோனா மீட்பு நடவடிக்கைகளுக்கு ரூ.13,352 கோடி செலவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை நாட்டிலேயே தலை சிறந்த மாநிலமாக மாற்ற வேண்டும். ஜெயலலிதாவின் வேதாநிலையம் நினைவில்லமாக மாற்றப்பட்டுள்ளது என்றார்.

மேலும், தமிழகத்தின் கடன் ரூ.5,70 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என தகவல் தெரிவித்துள்ளார். 2021 22 இடைக்கால வரவு செலவு திட்ட மதிப்பீட்டில் ரூ.1,738.81 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் முதற்கட்டத்தை அமைக்க ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதுக்கு ரூ.6,683 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் 12,000 பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என  ஓ.பன்னீர்செல்வம் தகவல் தெரிவித்துள்ளார்.