நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு அரசியல் நாடகம் ஆடுவதாக சட்டப்பேரவையில் திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என்கிற விதி உள்ளது.  அதன்படி தற்போது சென்னை கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இடநெருக்கடி உள்ளதால் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க முடியாது என்பதால், கலைவாணர் அரங்கத்திற்கு சட்டப்பேரவை கூட்டத்தொடர் மாற்றப்பட்டுள்ளது. 

 

மொத்தம் மூன்று நாட்கள் மட்டுமே கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில், எதிர்க்கட்சியான திமுக பல்வேறு பிரச்சனைகளை கூட்டத் தொடரில் எழுப்ப முடிவு செய்துள்ளது. இதற்காக சுமார் 20க்கும் மேற்பட்ட பிரச்சனைகளை திமுக பட்டியலிட்டுள்ளது. அதில் கொரோனா பாதிப்பு முக்கிய இடம் பிடித்துள்ளன. பொருளாதார இழப்பு மக்களின் வாழ்வாதார இழப்பு புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு தற்கொலைகள். கிசான் திட்டம் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை திமுக எழுப்ப திட்டமிட்டுள்ளது.  இந்நிலையில் முதல் நாள் கூட்டம் சட்டப்பேரவையில் இன்று தொடங்கியது.  அதில் உரையாற்றிய திமுக தலைவர் மு.க ஸ்டாலின். 

                           

தமிழகத்தில் நீட் தேர்வால் எண்ணற்ற மாணவ மாணவிகள் தற்கொலை செய்து தங்களது வாழ்க்கையை முடித்துக் கொண்டுள்ளனர். இதையும் சேர்த்து தீர்மானம் நிறைவேற்றி அவரது மறைவுக்கு இரங்கல் குறிப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினேன். அது ஏற்கப்படவில்லை, அது மிகுந்த வருத்தத்திற்குரியது.  நீட்தேர்வு ரத்து செய்வதாக அதிமுக தேர்தல் அறிக்கை மற்றும் ஆட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் விலக்கு பெறுவது குறித்து தமிழக முதலமைச்சர் பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தவில்லை எனவும் நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு அரசியல் நாடகம் ஆடுவதாகவும் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.