tamil nadu government ceveat petition in suprem court

ஸ்டெர்லைட் போராட்ட்த்தால் 13 பேர் துப்பாக்கி சூட்டில் இறந்து நிலையில் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்த்து. இந்நிலையில் தனிச்சட்டம் இயற்றி அந்த ஆலை மூடப்பட்ட்தை உறுதி செய்ய வேண்டுமென எதிர்க்கட்சிகள் பலவும் எதிர்பார்க்கும் நிலையில் தற்போது தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

வேதாந்தா நிறுவனம் உச்சநீதி மன்றத்தை அணுகினால் தமிழக அரசின் கருத்துக்களை கேட்க வேண்டும் எனக் கோரி தமிழக அரசு சார்பில் கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வேதந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தை அணுகி மீண்டும் ஆலையை திறப்போம் என கூறியுள்ள நிலையில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுவை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாக்கல் செய்துள்ளது.