BREAKING : மருத்துவக் கல்லூரிகள் கட்டியதில் முறைகேடு.. பச்சைக்கொடி காட்டிய தமிழக அரசு.. இபிஎஸ்க்கு சிக்கல்.!
அதிமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தில் திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர், நீலகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்களில் ரூ.4 ஆயிரம் கோடியில் புதிய மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளன.
முந்தைய அதிமுக ஆட்சியில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் கட்டியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அதிமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தில் திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர், நீலகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்களில் ரூ.4 ஆயிரம் கோடியில் புதிய மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளன.
அதில், மத்திய சுகாததாரத்துறையின் வழிகாட்டுதல்கள் மீறப்பட்டு இருக்கிறது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரங்கள் இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கூறியிருந்தனர். இதுகுறித்து விசாரணை நடத்துவதற்கான முறையான அனுமதி கோரி லஞ்ச ஒழிப்புத்துறை தமிழக அரசுக்கு கடிதம் எழுதியிருந்தது.
2017 முதல் 2021ம் ஆண்டு வரை முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி பொதுத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். எனவே பொதுப்பணித்துறை நிர்வாகம் தான் இந்த கட்டிடங்களை கட்டுவதற்கு அனுமதி பெற்றிருந்தது. அதற்கான ஒப்பந்தங்களையும் வழங்கி இருந்தது. இதில், பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஒப்பந்ததாரர்கள் மற்றும் அந்த கட்டிடத்தை கட்டிய அரசு பொறியாளர்கள் மேலும் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி மீது விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறை அனுமதி கேட்டிருந்த நிலையில் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.