கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை அடுத்து தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுத்தாப்பட உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில்  அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியது எதிர்பார்ப்புகளை அதிகரிக்கச் செய்துள்ளது. 

இந்நிலையில் ஆலோசனை கூட்டத்தில் என்ன நடந்தது என சில தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னையை தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் தீவிரமடையும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவது குறித்தும் முதலமைச்சர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. பாதிப்பு அதிகமாகும் மாவட்டங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து முடிவெடுக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது. கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் அதிகம் பாதித்த மாவட்டங்களின் பட்டியலில் திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களும் சேர்ந்துள்ளன.

இந்த மாவட்டங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்தி கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றி ஆட்சியர்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கருத்துக்களை கேட்டறிந்தார். விரைவில் ஊடரங்கு பற்றிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.