Asianet News TamilAsianet News Tamil

உதவி வாங்கிய கைகளின் ஈரம்கூட இன்னும் காயவில்லை.. அதுக்குள்ள அவங்க புத்தியை காட்டிட்டாங்க.. கொதிக்கும் ராமதாஸ்

சிங்களப் படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும்,  பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்கும் படி இந்தியா வலியுறுத்தி வரும் நிலையில், இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சரே பேசிய நிலையில், இலங்கை அரசின் இந்த அறிவிப்பு இந்தியாவை அவமதிக்கும் செயலாகும். 

Tamil Nadu fishermen boats auctioned ... Ramadoss condemned
Author
Tamil Nadu, First Published Jan 24, 2022, 6:40 AM IST

தமிழக மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட நாட்டுப்படகு, விசைப்படகு உள்ளிட்ட 105 படகுகள் வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி முதல் ஏலத்தில் விடப்பட விருப்பதாக இலங்கை அரசு அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது என ராமதாஸ் கூறியுள்ளார்.

தமிழகத்தில் ராமேஸ்வரம், மண்டபம், நாகப்பட்டினம் புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு ஊர்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கடந்த 2010-ம் ஆண்டு முதல் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு யாழ்ப்பாணம் காங்கேசன்துறை, காரைநகர், தலைமன்னார் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் 100-க்கும் மேற்பட்ட படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Tamil Nadu fishermen boats auctioned ... Ramadoss condemned

இந்நிலையில், இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம் காங்கேசன்துறை, காரைநகர், மன்னார், உள்ளிட்ட பல இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் ‌விடப்படுவதாக இலங்கை அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில், தமிழக மீனவர்களின் படகுகள் 105 படகுகள் ஏலம் விடப்படும். வருகிற பிப்ரவரி மாதம் 7-ம் தேதி முதல் 11-ம் தேதி வரையிலும் ஏலம்  நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழக மீனவர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், இலங்கை அரசின் இந்த அறிவிப்பு இந்தியாவை அவமதிக்கும் செயலாகும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Tamil Nadu fishermen boats auctioned ... Ramadoss condemned

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- தமிழ்நாட்டு மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட நாட்டுப்படகு, விசைப்படகு உள்ளிட்ட 105 படகுகள் வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி முதல் ஏலத்தில் விடப்பட விருப்பதாக இலங்கை அரசு அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. அதற்கான உரிமை இலங்கை அரசுக்கு இல்லை. 

Tamil Nadu fishermen boats auctioned ... Ramadoss condemned

சிங்களப் படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும்,  பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்கும் படி இந்தியா வலியுறுத்தி வரும் நிலையில், இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சரே பேசிய நிலையில், இலங்கை அரசின் இந்த அறிவிப்பு இந்தியாவை அவமதிக்கும் செயலாகும்.  

இந்தியாவிடமிருந்து  இலங்கை ரூ.18,090 கோடி கடன் வசதி பெற்றுள்ளது. உதவி வாங்கிய கைகளின் ஈரம் கூட இன்னும் காயாத நிலையில், படகுகளை ஏலத்தில் விட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை  அழிக்க இலங்கை துடிப்பது நியாயமல்ல. இலங்கையின் உண்மை முகத்தை இந்தியா அறிய வேண்டும்.

மீனவர்கள் கைதாகி விடுவிக்கப்பட்டால் அவர்களின் படகுகளையும் ஒப்படைக்க இலங்கை கடந்த காலத்தில் ஒப்புக் கொண்டுள்ளது. அதன்படி இலங்கை சிறைகளில் இப்போது வாடும் 56 மீனவர்களையும், அனைத்து படகுகளையும் விடுவிக்கும்படி இலங்கைக்கு மத்திய அரசு அழுத்தம் தர வேண்டும் என ராமதாஸ் தெரிவித்தள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios