தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கின்றது.அதற்கான வேலைகள் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை விமர்சன யுத்தங்கள், போஸ்டர் யுத்தங்கள் என தமிழகம் தயாராகிக்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் அதிமுக பாஜக கூட்டணி உறுதி என்று தமிழக மாநில தலைவர் முருகன் அறிவித்தார். அதன் பிறகு தமிழக தேர்தலில் போட்டியே திமுக பாஜகவுக்கு தான்.அதிமுக ஒரு பொருட்டல்ல என்று விபி.துரைச்சாமி பேசியதும்..., அதிமுகவில் இருந்து எதிர் தாக்குதல் உடனே வந்து விட்டது.ஆக இவர்களுக்குள் கூட்டணி உரசல் ஆரம்பித்துவிட்டது என்று நினைக்கும் அரசியல் விமர்சகளுக்கும், பொதுமக்களுக்கும் மத்தியில் முதல்வரை, முருகன் சந்தித்தது முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

கடந்த 2019 மக்களவை தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என அதிமுகவுடன் கைகோர்த்து தேர்தல் களத்தை பாஜக சந்தித்து வருகிறது. ஆனால் வெற்றி வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இந்த சூழலில் தான் வரும் சட்டமன்ற தேர்தலில் பல்வேறு வியூகங்கள் வகுத்து பாஜக செயல்படத் தொடங்கியுள்ளது. இதற்கு உதாரணமாகத் தான் பாஜக வேட்பாளர்களை ஜெயிக்க வைக்கும் மாவட்ட தலைவர்களுக்கு இன்னோவா கார் பரிசு என்று மாநிலத் தலைவர் எல்.முருகன் அறிவித்தார்.ஆனால் விமானம் கொடுத்தாலும் உங்களால் ஜெயிக்க முடியாது என்று திமுக தரப்பில் இருந்து விமர்சனம் வந்தது குறிப்பிடத்தக்கது. 

திமுகவில் இருந்து நேற்று வந்தவருக்கு அதிமுக வை பேச என்ன அருகதை இருக்கிறது என்று கொந்தளித்தார்கள் அதிமுக அமைச்சர்கள். பாஜக தலைவர் முருகனே.! சொல்லிவிட்டார் அதிமுகவுடன் கூட்டணி என்று பிறகு என்ன? என்று அதிமுக மூத்த அமைச்சர்கள் அந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள். இதற்கிடையில் அதிமுகவை வெறுப்பேற்றும் வகையில் அதிமுகவுடன் கூட்டணி தேர்தல் நேரத்தில் மாறுதலுக்கு உட்பட்டது என்று ஒரு குண்டை தூக்கிப் போட்டார் முருகன். அதில் இருந்து மீளமுடியாமல் இருக்கிறது அதிமுக. இந்த குரல் பாஜகவின் தலைமையில் இருந்து வந்ததா? என்று கலக்கத்தில் இருந்தார்  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

பாஜகவின் நிழல் அரசாக இருக்கும் அதிமுக மற்றும் அக்கட்சியின் அமைச்சர்கள் இதுவரைக்கும் மத்திய அரசு மீது எந்த குற்றச்சாட்டையும் வீசமுடியாமல் அமைதி காத்து வருகிறார்கள். எல்லாம் வருமானவரித்துறை ரெய்டுக்கு பயந்துதான்.இந்த நிலையில் இவ்வளவு அரசியல் அதிரடிகளுக்கு மத்தியில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்குச் சென்று பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் நேற்று இரவு 7 மணிக்கு சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு சுமார் அரை மணி நீடித்தது.


அப்போது தமிழகத்தில் பாஜக விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்ட 6 நாள் அனுமதி வேண்டும். ஊர்வலம் நடத்த அனுமதி இல்லாவிட்டாலும் விநாயகர் வழிபாட்டிற்கு பிறகு கொண்டு போய் தண்ணீரில் கறைக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கையை முதல்வரிடம் முருகன் வைத்திருக்கிறார். இதுஒருபுறம் இருந்தாலும் முக்கியமாக சந்தித்ததன் பின்னணி இதுதான் என்கிறார்கள் பாஜக மூத்த நிர்வாகிகள்.." பாஜக தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறன்றது. என்கிற தொகுதிகளுக்கான பட்டியலையும் ஒரு சில முக்கியமான தொகுதிகளை எங்களுக்கு வேண்டும் அதை நாங்கள் விட்டுக்கொடுக்க முடியாது என்றும் முருகன் பட்டியல் கொடுத்திருக்கிறார்.அதிமுக இதுவரை வெற்றி பெற்ற தொகுதிகளாகவே இருக்கிறதே..! சரி பேசிக்கொள்ளலாம் என்று  சொன்னதாகத் தெரிகிறது. முதல்வர்..' நீங்கள்(முருகன்) அதிமுகவுடன் கூட்டணி உறுதி என்று சொன்ன பிறகு  துரைச்சாமி..'திமுக பாஜகவுக்கும் தான் போட்டி என்று சொன்னதை எங்கள் அமைச்சர்கள் யாரும் அதை ஏற்றுக்கொள்ள வில்லை என்பதையும் நினைவு படுத்தி பேசியிருக்கிறார்.தமிழக பாஜகவில் வேட்பாளர் யார்.?என்று பட்டியல் தயார் நிலையில் இருக்கிறது. என்கிறார்கள்.

 
கடந்த 2019 மக்களவை தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என அதிமுகவுடன் கைகோர்த்து தேர்தல் களத்தை பாஜக சந்தித்து வருகிறது. ஆனால் வெற்றி வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இந்த சூழலில் தான் வரும் சட்டமன்ற தேர்தலில் பல்வேறு வியூகங்கள் வகுத்து பாஜக செயல்படத் தொடங்கியுள்ளது. இதற்கு உதாரணமாகத் தான் பாஜக வேட்பாளர்களை ஜெயிக்க வைக்கும் மாவட்ட தலைவர்களுக்கு இன்னோவா கார் பரிசு என்று மாநிலத் தலைவர் எல்.முருகன் அறிவித்தார்.ஆனால் விமானம் கொடுத்தாலும் உங்களால் ஜெயிக்க முடியாது என்று திமுக தரப்பில் இருந்து விமர்சனம் வந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு அரசியல் அதிரடிகளுக்கு மத்தியில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் பழனிசாமியின் வீட்டிற்குச் சென்று பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் நேற்று இரவு 7 மணிக்கு சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு சுமார் அரை மணி நீடித்தது.

இதில் ஏதாவது அரசியல் காரணங்கள் இருக்குமா என்று கேள்வி எழுந்தது. இதற்கிடையில் சமூக வலைதளங்களில் பலவிதமாக கருத்துகள் முன்வைக்கப்பட்டன. ஒருவேளை கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையாக இருக்குமா என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை ஊர்வலம் குறித்து பேசியிருக்கிறார்.

இந்த சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகள் அமலில் இருக்கின்றன. இதனைக் கருத்தில் கொண்டு ஊர்வலம் இல்லாமல் விநாயகர் சிலைகளை மட்டும் வழிபட்டு கொண்டு போய் கரைப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்று முதலமைச்சரிடம் வலியுறுத்தினேன். இதுபற்றி அதிகாரிகளுடன் ஆலோசித்து விட்டு சொல்வதாக தெரிவித்தார்.